📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 10:03 AM

மதுராந்தகத்தில் நாளை பொது விடுமுறை: இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு அரசு உத்தரவு!

மதுராந்தகத்தில் நாளை பொது விடுமுறை: இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு அரசு உத்தரவு!

தேர்தல் பணிகளுக்காகத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்கும் வகையில் தமிழக அரசு இந்த விடுமுறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தங்கு தடையின்றி ஆற்ற ஏதுவாக மதுராந்தகம் தொகுதி எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வாக்குப்பதிவு அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு, சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.