📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil October 14, 2026 10:04 PM

மலேசிய இளையர்கள் கடன் வலையில் சிக்குகின்றனர்

மலேசிய இளையர்கள் கடன் வலையில் சிக்குகின்றனர்

கோலாலம்பூர்: மலேசியாவில் 30 வயதுக்குட்பட்ட இளையர்கள் ‘இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்’ (பிஎன்பிஎல்) திட்டத்தின் கீழ் $1.7 பில்லியன் (5.4 பில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள பொருள்களை வாங்கியுள்ளனர்.

மொத்தம் 65.9 மில்லியன் பரிவர்த்தனைகள் மூலம் இது நடந்துள்ளது. நாடு முழுவதும் நடந்த 173.9 மில்லியன் ‘பிஎன்பிஎல்’ பரிவர்த்தனைகளில் இது 37.9% ஆகும்.

அக்டோபர் 14ஆம் தேதி மலேசிய நிதி அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டது.

ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, இளம் வாடிக்கையாளர்களிடம் நிலுவையில் உள்ள ‘பிஎன்பிஎல்’ கடன் தொகை 2.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இதில் 4 விழுக்காடு அதாவது 96.8 மில்லியன் ரிங்கிட் இன்னமும் செலுத்தப்படவில்லை.

இளையர்கள் கடன் வலையில் சிக்குவதைத் தடுக்க, கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கடன் திரும்பச் செலுத்தும் திறனை கட்டாயம் மதிப்பிட வேண்டும் என்று பயனீட்டாளர் கடன் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

‘பிஎன்பிஎல்’ என்பது ஒருவகைக் கடன் என்பதை பயனர்கள் உணர வேண்டும் என நிதி அமைச்சு நினைவூட்டியது.

இந்தச் சேவைகள் 2025 பயனீட்டாளர் கடன் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.