📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 17, 2026 11:30 AM

மக்களே நகை வாங்கப் போறீங்களா?.. இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?

மக்களே நகை வாங்கப் போறீங்களா?.. இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?

மக்களே நகை வாங்கப் போறீங்களா?.. இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கம் கண்டு வரும் நிலையில், சென்னையில் கடந்த 12-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. அதைத் தொடர்ந்து கடந்த 13-ஆம் தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,125-க்கும் விற்பனையானது.

15-ஆம் தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது. மேலும், நேற்று (16.09.2026) தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.