📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 12, 2026 11:01 AM

மக்களே நகை வாங்க ரெடியா?...இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

மக்களே நகை வாங்க ரெடியா?...இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

மக்களே நகை வாங்க ரெடியா?...இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் (10.10.26) 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,880க்கும், சவரனுக்கு ரூ 520 அதிகரித்து ஒரு சவரன் ரூ 1,11,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் படி இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் ரூ 13,840க்கும், சவரனுக்கு ரூ 320 குறைந்து ஒரு சவரன் ரூ 1,10,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.