📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 12, 2026 11:04 AM

சேலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; போலீசார் விசாரணை

சேலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; போலீசார் விசாரணை

சேலம்: சேலத்தில் உள்ள சினிமா நகர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் அமைந்துள்ளது. கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடி, காப்பு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.

நேற்றிரவு காரில் வந்த முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள், காவலாளி தாக்கி, அங்கேயே கட்டிப்போட்டுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஸ்பிரே அடித்து மறைத்துள்ளனர். குடோனின் உள்ளே சென்ற அந்த கும்பல் 600 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.14 கோடியாகும்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு தலைமையிலான போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.