📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 17, 2026 12:33 AM

மெக்கா மீது டிரோன் தாக்குதல் முயற்சி; எகிப்து அதிபரின் உதவியை நாடிய சவுதி இளவரசர்

மெக்கா மீது டிரோன் தாக்குதல் முயற்சி; எகிப்து அதிபரின் உதவியை நாடிய சவுதி இளவரசர்

மெக்கா மீது டிரோன் தாக்குதல் முயற்சி; எகிப்து அதிபரின் உதவியை நாடிய சவுதி இளவரசர்

புனித மசூதிகள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்புக்கு பேராபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துக் கொள்வதை பொருத்துக் கொள்ள முடியாது என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published : September 16, 2026 at 8:16 PM IST

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து தாக்கியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு ஹூதி அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவாளர்களான ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா ஆதரவு நாடான ஏமனுக்கும் இடையிலான மோதல் சமீப சில நாட்களாக தீவிரமடைந்துக் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் ஹூதிகள் ஏமன் மீதான தாக்குதல்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர். முக்கியமாக சமீபத்தில் ஏமன் மீதான கடல்வழி முற்றுகை, செங்கடலில் அதன் கப்பல்களை குறி வைத்தல் போன்ற தீவிர நடவடிக்கைகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த வாரத்தில் ஏமன் நாட்டின் செங்கடல் கடற்கரை மற்றும் சவுதி எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் பாப் எல்-மாண்டெப் நீரிணையை (Bab el-Mandeb Strait) தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ஹூதி கொண்டு வந்தது.

ஹூதி-யின் இந்த நடவடிக்கையால் உலக எரிசக்தி துறை மற்றும் உலக பொருளாதாரம் மீண்டும் மிகப்பெரிய சிக்கலுக்குள் ஆளாகிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஏனெனில், சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும் சூயஸ் கால்வாயே, பாப் எல்-மாண்டெப் நீரிணையின் மற்றொரு முனையாக உள்ளது. இதையே தற்போது ஹூதிகள் சிறைப்பிடித்துள்ளனர்.

HRH the Crown Prince and Egyptian President hold a bilateral meeting and an expanded session of talks. https://t.co/IYxwJOQAyv pic.twitter.com/Tsv2wGQJIy

இந்த முற்றுகையைத் தொடர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான இஸ்லாமிய யாத்ரீகர்கள் வந்துபோகும் மெக்காவை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டதாக சவுதி குற்றம்சாட்டியுள்ளது. அதேசமயம், இந்த டிரோன் தாக்குதலை தாங்கள் முறியடித்துவிட்டதாக சவுதி தெரிவித்துள்ளது.

மேலும், சவுதியின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ஹூதிகளின் அரசியல் குழுவைச் சேர்ந்த ஹசிம் அல்-அசாத் அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மெக்காவை நாங்கள் தாக்குவதாக குற்றம்சாட்டுவது பழங்கால குற்றச்சாட்டு நடவடிக்கையாகும். இந்த பொய்யை கூறி யாரையும் ஏமாற்ற முடியாது" என கூறியுள்ளார்.

The OIC General Secretariat Condemns the Houthi Attacks on Makkah and the Madinah Region#OIC #Makkah #Madinah #SaudiArabia #Houthi pic.twitter.com/nQaz3CF2ol

இதேபோல் சவுதி தரப்பில், "புனித மசூதிகள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்புக்கு பேராபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துக் கொள்வதை பொருத்துக் கொள்ள முடியாது. எங்களது கூட்டணியாளர்களின் உதவியுடன் மிகக் கடுமையான எதிர் தாக்குதலை மேற்கொள்ள நேரிடும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆதரவு நாடுகளின் உதவியை நாடும் தொடக்கமாக சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசியை நேற்று (செப்டம்பர் 16) சந்தித்தார். இந்த சந்திப்பின்போது செங்கடலையும், ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மாண்டெப் நீரிணைகள் வழியாக மேற்கொள்ளப்படும் கடல் வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் மெக்கா மீதான திடீர் தாக்குதலுக்கு தங்களின் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.

In #Yemen, ongoing hostilities are forcing families from their homes and killing and injuring civilians caught in the crossfire.@UNReliefChief allocated $9 million to provide urgent assistance to displaced families and host communities.Read more: https://t.co/0jUBdHL9nO pic.twitter.com/l8o3hJrsdw

ஏமன் அரசுக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் அமைப்பான ஹூதிகளுக்கும் இடையிலான உள்நாட்டு போர் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. இதில், ஹூதிகள் ஈரானையும், ஏமன் அரசு சவுதி அரேபியாவையும் ஆதரிக்கின்றன.

தொடர்ந்து, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலை அடுத்து, அந்த நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மற்றும் இஸ்ரேல் மீதும் ஹூதி அமைப்பு அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகிறது.

இதுதவிர, ஏற்கனவே ஈரான் ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றிய சூழலில்தான், வளைகுடா நாடுகள் அதிகம் பயன்படுத்தி வரும் செங்கடலில் உள்ள மற்றுமொரு முக்கியமான பாப் எல்-மாண்டெப் நீரிணையை ஹூதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

அதாவது, ஆப்பிரிக்காவின் ஜீபூட்டி மாகாணத்தில் உள்ள அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவில் இருக்கும் தீவு கடற்கரை நகரை கைப்பற்றி, பாப் எல்-மாண்டெப் நீரிணையை ஹூதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.