📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 22, 2026 08:03 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 22 செப். 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 22 செப். 2026

மேஷம்: நீண்டநாளாக பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில்தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

ரிஷபம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார் கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும்.

மிதுனம்: மனக்குழப்பம் வந்து போகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்: முன்கோபத்தை குறைப்பது நல்லது. ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். கையில் பணம் புரளும். வியா பாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

கன்னி: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். கையில் பணம் புரளும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்கள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்பனையாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் ஓயும்.

விருச்சிகம்: உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனை யைப் புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தருவதாக அமையும்.

தனுசு: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு கூடும். அலுவலகத்தில் அமைதி காப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.

மகரம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் முன்னேற்றம் இருக்கும். வியா பாரம் சிறக்கும். அலுவலக பணிகளை வீட்டிலும் செய்ய வேண்டி வரும்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன் கோபம் விலகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.

மீனம்: பழைய நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது வாகனம் வாங்குவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.