📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 17, 2026 06:03 AM

மாணவியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்

மாணவியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்

தூத்துக்குடி,

மாணவியிடம் ரூ.1லட்சம் லஞ்சம் கேட்ட கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் திருநெல்வேலி பெருமாள்புரம் சாரா தாக்கர் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வு வழிகாட்டியாக பேராசிரியை லீலாவதி பாக்கியதாய் இருந்து வந்தார். ஆய்வு பணிக்கு ஒப்புதல் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் மாணவியிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இது தொடர்பான அலைபேசி பேச்சு ஒலிப்பதிவையும் மாணவி நிர்வாக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். பின்னர், கல்லூரி நிர்வாகம் குழு அமைத்து விசாரணை நடத்தியது. அதில், மாணவியிடம் பேராசிரியை லஞ்சம் கேட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பெலிசியா கிளாடிஸ் பேராசியை லீலாவதி பாக்கியதாயை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்க ஆசிரியரே லஞ்சம் பெற்ற சம்பவம் கல்லூரியில் ப்ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.