📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 15, 2026 06:34 PM

லாபத்தைப் பகிரும் ஸ்பிரிங்லீஃப் பரோட்டா உணவகம்; வார இறுதிகளில் பணியாற்றாத உரிமையாளர்

லாபத்தைப் பகிரும் ஸ்பிரிங்லீஃப் பரோட்டா உணவகம்; வார இறுதிகளில் பணியாற்றாத உரிமையாளர்

சிங்கப்பூரில் புதுமையான பலவகை பரோட்டா வகைகளை அறிமுகப்படுத்தி புகழ்பெற்ற உணவகச் சங்கிலி ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா பிளேஸ்’ தற்போது 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இந்த உணவக அமைப்பின் உரிமையாளர் திரு எஸ்.வி.குணாளன், அண்மையில் ‘த ரோஜாக் ரூம்’ என்ற வலையொளியில் பங்கேற்றுப் பேட்டி அளித்தார். உணவு மற்றும் பானங்கள் துறையில் இருந்தபோதிலும், தாம் வார இறுதிகளில் வேலை செய்வதில்லை என்ற சுவாரசியமான தகவலை அவர் அதில் பகிர்ந்துகொண்டார்.

தொழில் தொடங்கிய மூன்று ஆண்டுகளில், தம்மை அலுவலக வேலை நேரத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனையை தமது மனைவி விதித்ததாக அவர் தெரிவித்தார். இந்தச் சவாலான துறையில் அது சாத்தியமற்ற ஒன்றாகக் கருதப்பட்டபோதிலும், திரு குணாளன் அதற்கேற்ப ஒரு கட்டமைப்பு முறையை உருவாக்கினார்.

அதன்படி, ஸ்பிரிங்லீஃப் உணவகத்தில் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய அனுபவமிக்க ஊழியர்களுக்குப் புதிய கிளைகளில் ‘இளநிலைப் பங்காளி’ வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், அவர்களின் அடிப்படைச் சம்பளம் அப்படியே தக்கவைக்கப்படும். அதேவேளையில், அவர்கள் அந்தப் புதிய கிளையின் லாபத்தில் முதல் ஆண்டில் 10 விழுக்காட்டையும் இரண்டாம் ஆண்டில் 20 விழுக்காட்டையும் மூன்றாம் ஆண்டிலிருந்து 30 விழுக்காட்டையும் பங்காகப் பெறுவர்.

எனினும், அவர்களுக்கு நிறுவனத்தில் எவ்வித மூலதனப் பங்கும் வழங்கப்படுவதில்லை. கணக்கியல் துறையில் தாம் பெற்ற பயிற்சியே இதற்குப் பெரிதும் உதவியதாகக் கூறிய திரு குணாளன், “நிறுவனத்தை விற்க நேரிட்டால், சொத்து மதிப்பை மீண்டும் கணக்கிடும் சிக்கல்கள் இதில் எழாது,” என்றார்.

வாரயிறுதிகளில் ஓய்வு பெற விரும்பியதுடன், திறமையான ஊழியர் ஒருவர் வேலையை விட்டு விலகுவதைத் தடுக்கவேண்டிய கட்டாயமும் இந்த லாபப் பகிர்வுத் திட்டத்துக்கு முக்கியக் காரணங்கள் என்று திரு குணாளன் கூறினார்.

உணவகத்தின் தனித்துவமான சுவையைத் தாண்டி, பரோட்டாவுக்கான மாவுத் தயாரிப்பு குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“எங்கள் உணவகத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பரோட்டா மாவு உருண்டைகளும் மதியிறுக்கக் குறைபாடு உள்ளவர்களால் தயாரிக்கப்படுகின்றன,” என்று திரு குணாளன் தெரிவித்தார்.