📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 20, 2026 11:03 PM

கடின உழைப்பு, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி; இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் பாராட்டு

கடின உழைப்பு, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி; இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் பாராட்டு

புதுடில்லி: ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது; ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில், இந்திய வீராங்கனைகள் சோனம் உத்தம் மஸ்கர், இளவேனில் வாலறிவன் மற்றும் விதர்சா கே வினோத் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது பெருமையளிக்கிறது.

அவர்களின் கடின உழைப்பும், கூட்டு முயற்சிக்கும் வெற்றி கிடைத்துள்ளது. இவர்களின் இந்த வெற்றி எதிர்வரும் காலங்களில் பல விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.