கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. சூரி வைத்த கோரிக்கை.. லைகா ஆஃபிஸில் நடந்தது தெரியுமா?
சென்னை: விஜய் - சங்கீதா மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அவர் இயக்கியிருக்கும் முதல் படம் என்பதால் இதன் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஜேசனும் தன் பங்குக்கு ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாகியிருக்கிறார். படமானது அக்டோபர் இரண்டாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். அதை ஓரளவுக்கு ஈடுகட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஜேசன் சஞ்சய்யின் வருகை. முதலில் விஜய்யின் வேட்டைக்காரன், போக்கிரி ஆகிய படங்களின் பாடல்களில் சில நிமிடங்கள் தலை காட்டிய அவர்; அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கு சென்று முழு நேரமும் சினிமா தொடர்பான படிப்பை பயின்றார். மாணவராக இருந்தபோதே சில குறும்படங்களை இயக்கி அனைவரையும் ஈர்த்தவர்.
சிக்மா இயக்குநர்: கல்லூரியை முடித்த அவர்; லைகா பேனரில் சிக்மா படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த அறிவிப்பு வந்தபோது நெப்போட்டிஸத்தில் இவரது பெயர் அதிகம் அடிபட்டது. அவரோ தந்தை போன்றே சைலெண்ட்டாக இருந்து காரியத்தில் மட்டும் கண் வைத்திருந்தார். இந்தியா உட்பட பல லொக்கேஷன்களில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. சிக்மாவில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க; ராஜூ சுந்தரம், சம்பத் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்திருக்கிறார்.
அக்டோபரில் ரிலீஸ்: படமானது முதலில் ஜூலை மாதம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் அந்த மாதம் ஜனநாயகன் வந்ததால் இந்தப் படத்தின் ரிலீஸ் அக்டோபர் இரண்டாம் தேதிக்கு தள்ளி போயிருக்கிறது. நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சூரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அதில் சூரி பேசியது பலரிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சூரி பேசியது: அவர் அந்த விழாவில் பேசுகையில், "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை லைகா நிறுவனத்துக்கு சென்றிருந்தேன். அப்போது ஜேசன் சஞ்சய்யும் அங்கே இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்னிடம், 'அண்ணா சந்தீப் கிஷன்தான் ஹீரோ. ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா?' என்று கேட்டார். நானும் கேட்டேன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் சொன்னார். நான் ஒரு இடத்தில்கூட சோர்ந்து போகவில்லை. அந்த அளவுக்கு கதை இருந்தது. கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும்.
விஜய்யிடம் பேசியது மாதிரியே: அந்த இரண்டரை மணி நேரமுமே நான் விஜய் அண்ணனுடன் பேசியது மாதிரியும், இருந்தது மாதிரியும்தான் தோன்றியது. கதை கேட்டு முடித்துவிட்டு தமிழ்க்குமரனிடம் நான்,'சார் என்ன சார் இவ்வளவு அழகாக இருக்கிறார். அவரை எப்படியாவது நடிக்க வையுங்கள் என சொன்னேன். எவ்வளவோ சொல்லியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என சொன்னார். சஞ்சய் பிரதர் நீங்கள் படம் இயக்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோவாகவும் நடித்துவிடுங்கள் என்றார்",.
முன்னதாக, க்மா படத்தில் சந்தீப் கமிட்டாவதற்கு முன்பு சூரியிடம் ஜேசன் கதை சொன்னதாகவும்; அதனை சூரி ரிஜெக்ட் செய்துவிட்டார் என்றும் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அது சூரியை நடிக்க வைப்பதற்காக சொல்லப்பட்ட கதை இல்லை; ஒரு ஒப்பினீயனுக்காக சொல்லப்பட்ட கதை என்பது.