📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 08, 2026 09:01 AM

க்ரிஞ்ச் பண்ணாதீங்க ப்ரோ.. ஸ்டாலினை கிண்டல் செய்த விஜய்?.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்

க்ரிஞ்ச் பண்ணாதீங்க ப்ரோ.. ஸ்டாலினை கிண்டல் செய்த விஜய்?.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று சட்டப்பேரவையில் தனது பதிலுரையை முன்வைத்தார். அப்போது வழக்கம்போல் திமுகவை அட்டாக் செய்த அவர்; மிசா குறித்து பேசும்போது செய்த செய்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவர் கிண்டல் செய்யும்படி இருந்ததை தொடர்ந்து; கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் அட்டாக் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அதில் காவல் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் விஜய். சில நாட்களுக்கு முன்பு பேரவையில் பேசிய அவர், 'திங்கட் கிழமை பதில் சொல்கிறேன். எதிர்க்கட்சியினர் யாரும் ஓடிவிடக்கூடது' என கண்டிஷன் வைத்துவிட்டு சென்றார். இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் திங்கட் கிழமையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது.

வழக்கமான செயல்தான்: உதயநிதி ஸ்டாலின் கேட்ட அத்தனை கேள்விகளுக்கு சூப்பராக முன்தயாரிப்பு செய்து திங்களில் வந்து எதிர்க்கட்சியினரை பொங்கல் சாப்பிட வைக்கப்போகிறார் விஜய் என்றுதான் அவரது கட்சியினர் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் வழக்கம்போல்தான் நடந்துகொண்டார். அதாவது அவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இப்போது ஆட்சியை பிடித்த பிறகும் திமுகவை மட்டும் எப்படி அட்டாக் செய்தாரோ அதே ஃபார்முலாவைத்தான் நேற்றும் கடைப்பிடித்தார்.

பதிலே வரலயே?: மேம்போக்காக சில பதில்களை மட்டும் சொல்லிவிட்டு; தன்னுடைய நேற்றைய உரையில் முழுக்க முழுக்க திமுக மீதே குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். அதுமட்டுமின்றி காலங்காலமாக திமுக மீது விமர்சனம் வைக்க பயன்படுத்தப்படும் சர்காரியா கமிஷனையும் துணைக்கு வைத்துக்கொண்டார். அவர் உரையை வாசித்து முடித்த பிறகு தங்களுக்கு பேச அனுமதியளிக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை வைக்க; முதலில் ஓகே சொன்ன சபாநாயகர் பிறகு அனுமதி மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் வெளிநடப்பும் செய்துவிட்டார்கள்.

மிசா பற்றி கிண்டல்?: நேற்றைய விஜய்யின் உரையில் பெரிய சர்ச்சையை சந்தித்தது என்றால் மிசா தொடர்பான அவரது பேச்சுதான். 'எதற்கெடுத்தாலும் மிசா மிசா என்று சொல்கிறார்கள். ஐயா பெரியவர்களே மிசா வரலாறு எல்லோருக்கும் தெரியும்' என சொல்லிக்கொண்டிருக்கும்போது; தன்னுடைய கையை தாடையிடம் கொண்டு சென்று ஏதோ ஒரு ஆக்‌ஷன் செய்தார். மிசாவில் கைதாகி இருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் ஸ்டாலினின் தாடை சேதமடைந்தது. அதை கிண்டல் செய்யும் விதமாகத்தான் அவர் இப்படி ஒரு மோசமான உருவ கேலியை செய்திருக்கிறார் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம்.

சண்முகம் கண்டனம்: மாநில உரிமைக்காக சிறை சென்று தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவரை இப்படி கிண்டல் செய்திருக்கக்கூடாது என்று கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. தவெகவுடன் கூட்டணி வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகமும் இதனை கண்டித்திருக்கிறார். இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு விஜய்யை அட்டாக் செய்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "இதுல தவடைல கை வச்சி கிண்டல் பண்ண என்ன இருக்கு ப்ரோ? அதுவும் இவ்வளவு சத்தமா..? சினிமாவுல மட்டும் ஜெயிலுக்கு போறவங்களுக்கு இது கிண்டலாத்தான் இருக்கும். மக்களுக்காக போராடி ஒருநாள் உள்ள இருந்து பாத்தா தெரியும். Stop such cinematic behaviour. Very cringy" என குறிப்பிட்டிருக்கிறார்.