📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 08, 2026 08:01 AM

Immortal Day 4 Box Office

Immortal Day 4 Box Office

சென்னை: ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இம்மார்ட்டல். மாரியப்பன் சின்னா என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்துக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்த சூழலில்; அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமின்றி ஹீரோவாகவும் வலம் வருகிறார். இப்போது அவர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இம்மார்ட்டல் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசர், ட்ரெய்லர் மூலம் இதன் மீதான எதிர்பார்ப்பை படக்குழு எகிற வைத்திருந்தது. மேலும் அவற்றில் கயாடுவின் கவர்ச்சியை பார்த்து; கண்டிப்பாக இதில் கவர்ச்சி விருந்து இருக்கிறது என்றும் கணக்கு போட்டிருந்தார்கள் ரசிகர்கள்.

எப்படி இருக்கு படம்?: ஆனால் படக்குழுவின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது. கயாடுவின் கவர்ச்சியை மட்டும் வைத்திருக்காமல்; முழு படத்தையும் வாம்ப்பயர் ஜானரில் உருவாக்கியிருந்தார்கள். இந்தியாவில் இந்த ஜானரில் படங்கள் வருவது அரிதாகும். சில நாட்களுக்கு முன்பு வெளியான இம்மார்ட்டல் படம் அந்த ஜானரில் சூப்பராக ஒர்க் அவுட் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சீனிலும் ரசிகர்களை கவரும் விஷயத்தை இயக்குநர் வைத்திருந்தார்.

சிஜி பணிகள் அபாரம்: இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கயாடுவின் கேரக்டரிலேயே இயக்குநர் சூப்பரான ட்விஸ்ட்டை வைத்திருந்தார். அவரது கதாபாத்திரம் கிளாமராக வடிவமைக்கப்பட்டிருந்தாலும்; அதில் ஆபாசம் எல்லாம் துளிக்கூட இல்லை. அதேபோல் படத்தின் சிஜி பணிகள்தான் டாப் நாட்ச். பல விஷயங்கள் கிராஃபிக்ஸ் மாதிரியே தெரியவில்லை. உண்மை மாதிரியே இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதை பார்த்து ரசிகர்களும் பிரமிப்பில் வாயை பிளந்துவிட்டார்கள்.

ஜிவிக்கு ஹிட்: ஆகமொத்தம் விமர்சன ரீதியாக இந்தப் படம் ஜிவி பிரகாஷுக்கு ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. இதற்கு முன்னர் வெளியான ஹேப்பி ராஜ் உள்ளிட்ட படங்கள் அவருக்கு சுமாரான ஹிட்டையே கொடுத்தன. சென்சேஷனல் ஹிட்டுக்கு காத்திருந்த அவருக்கு; இம்மார்ட்டல் இன்பத்தை கொடுத்திருக்கிறது. இதனால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். அதுமட்டுமின்றி மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தெரிகிறது.

வசூல் நிலவரம்: ஆகமொத்தம் இத்தனை வருடங்கள் சென்சேஷனல் ஹிட்டுக்கு காத்திருந்த ஜிவிக்கு இப்படம் மூலம் அது கிடைத்துவிட்டது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அந்த தளத்தின் தரவுகள்படி, நான்காவது நாளான நேற்று 70 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். ஆகமொத்தம் நான்கு நாட்களில் ஐந்து கோடியே 22 லட்சம் ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிகிறது. ஐந்து நாட்களுக்குள் ஐந்து கோடி ரூபாய் வசூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.