📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 04, 2026 09:04 AM

கிருஷ்ண ஜெயந்தி 2026 : தப்பி தவறி கூட கிருஷ்ண ஜெயந்தி அன்று இதை செஞ்சிடாதீங்க..!

கிருஷ்ண ஜெயந்தி 2026 : தப்பி தவறி கூட கிருஷ்ண ஜெயந்தி அன்று இதை செஞ்சிடாதீங்க..!

கிருஷ்ண ஜெயந்தி 2026 : தப்பி தவறி கூட கிருஷ்ண ஜெயந்தி அன்று இதை செஞ்சிடாதீங்க..!

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியே கோகுலாஷ்டமி என கொண்டாடப்படுகிறது. கண்ணனின் அவதார நட்சத்திரம் ரோகிணி. ஆவணி ரோகிணியும் அஷ்டமி திதியும் இணைந்த நாளில் கிருஷ்ணன் அவதாரம் செய்தார். இந்த ஆண்டு இன்றைய தினம் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணஜெயந்தி+ கோகுலாஷ்டமியை கொண்டாடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டின் வாசலில் கோலம் இட்டு, அதில் கண்ணனின் சின்ன சின்ன பாதங்களை வரைய வேண்டும். பிறகு கிருஷ்ணனின் படம் அல்லது விக்ரகத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூ சூட வேண்டும். பிறகு கண்ணனின் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சிக்க வேண்டும். குழந்தை இல்லாதவர்கள் ஆலிலை கிருஷ்ணனின் படத்தையோ விக்கிரகத்தையோ வைத்து வழிபடுவது சிறப்பு. மற்ற பண்டிகைகள் எல்லாம் விரதம் இருந்து கடைப்பிடிப்போம். ஆனால் கிருஷ்ண ஜெயந்திக்கு நிறைய பலகாரங்கள் செய்து படைக்க வேண்டும். இந்த நாளில் மனதார கிருஷ்ணரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். அந்தவகையில் கிருஷ்ண ஜெயந்தி முந்தைய நாளில் சிலவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்.

அதாவது முந்தைய நாளில் அசைவ உணவுகளை உண்பதன் மூலம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நள்ளிரவு 12 மணிக்கு முன் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். தூங்கும் முன் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் கூறினார்.

ஜென்மாஷ்டமி நாளில் காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருக்க வேண்டுமாம். விரதம் தொடங்கிய நிமிடம் முதல் கிருஷ்ணர் நாமத்தை ஜெபிக்க வேண்டுமாம்.தொடர்ந்து கோயிலுக்கு சென்று கிருஷ்ணரை வணங்கிவிட்டு அபிஷேகம் செய்ய வேண்டுமாம்.

ஜென்மாஷ்டமி விரதத்திற்கு தேவையான பொருட்கள்: பூக்கள், அடப் அரிசி, பழங்கள், மலர்கள், துளசி இலைகள், பத்தி, சாம்பிராணி, தீபம், பஞ்சகவ்யா, பஞ்சகுரி, சணல், மணல், பஞ்சவர்ண பொடி, தேன்பாத்திரம், திராட்சை.கிருஷ்ணரின் படத்தை வைத்து நன்றாக குளிக்க வைத்து விடவும். பிறகு அவற்றை அலங்கரித்து தட்டில் இனிப்புகள், பழங்கள் மற்றும் கிருஷ்ணருக்கு பிடித்த உணவு பொருட்களை சமர்பித்து வணங்க வேண்டும்.

கட்டாயம் கிருஷ்ணருக்கு பிடித்த உணவு பட்டியலான வெண்ணெய் இடம்பெற்றிருக்க வேண்டும். முதலில் மூல முதற்கடவுளான விநாயகரை போற்றி வழிபாட்டை துவங்க வேண்டும். தொடர்ந்து வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து அவரை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.

அதன் பிறகு மனம் அமைதியாக இருக்க சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். விளக்கை ஏற்றி கிருஷ்ணரின் நாமத்தை ஜெபித்துவழிபட வேண்டும். அப்போது ஒவ்வொரு மலர்களாக கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து பூஜை செய்ய வேண்டும்.