📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 17, 2026 05:00 PM

கேலாங் விபத்தில் நடையர் மரணம்

கேலாங் விபத்தில் நடையர் மரணம்

கேலாங்கில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) நிகழ்ந்த விபத்தில் 69 வயது முதியவர் மரணமடைந்தார்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 47 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கேலாங் லோரோங் 32, கேலாங் ரோடு சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் காவல்துறைக்கும் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது.

விபத்தில் சிக்கிய நபர் சுயநினைவின்றிக் கிடந்தார். உடனடியாக அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

இதில் தொடர்புடைய 46 வயது ஓட்டுநர் கவனமின்றித் தனது வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படுகிறது. அவரிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட சாலைப் போக்குவரத்து நிலவரங்களின்படி, 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் காயங்களை ஏற்படுத்திய சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன.

வயதான நடையர்கள் தொடர்பான விபத்துகள் 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 121ஆக இருந்த நிலையில், 2026ல் 144 சம்பவங்களாக அதிகரித்துள்ளன.

அதேவேளையில் காயமடைந்த வயதான நடையரின் எண்ணிக்கை 106லிருந்து 132ஆக அதிகரித்துள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2026ல் பதிவான 38.9 விழுக்காட்டுச் சம்பவங்களில் சாலை விதிகளை மீறிs சாலையைக் கடந்ததாலும் நடையர்களுக்கான பாதைகளைவிட்டு விலகி பாதுகாப்பாற்ற முறையில் சாலையைக் கடந்ததாலும் முதிய நடையர்கள் விபத்தில் சிக்கினர்.