📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 02:05 AM

Jailer 2: இன்னைக்கும் என்னென்னைக்கும் ஒரு தலைவன் தான்.. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் ப்ரோமோ எப்படி?

Jailer 2: இன்னைக்கும் என்னென்னைக்கும் ஒரு தலைவன் தான்.. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் ப்ரோமோ எப்படி?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் பின் வாங்குற ஐடியாவே இல்லாமல் அக்டோபர் 15ம் தேதியை லாக் செய்த நிலையில், தற்போது செகண்ட் சிங்கிள் ரிலீஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

கோலமாவு கோகிலா படத்தில் இருந்து அனிருத் மற்றும் நெல்சன் காம்போ தொடர்கிறது. மேலும், நெல்சனின் ஃபன் ப்ரோமோவை பார்த்து பல இயக்குநர்களும் அதை ஃபாலோ செய்ய ஆரம்பித்தாலும் இன்னைக்கும் என்னெனைக்கும் ஓஜி காம்போவாக நெல்சன் - அனிருத் காம்போ உள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் நடிக்கும் அப்டேட்கள் வெளியாகி வந்த நிலையில், செகண்ட் சிங்கிள் ப்ரோமோவை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

எல்நினோ முதல் அனிருத் பாஸ்போர்ட் எரிப்பது வரை: வழக்கம் போல இந்த முறையும் நெல்சன் அனிருத் ஸ்டூடியோவுக்குச் சென்று பாட்டுக்காக போராடி வரும் கான்செப்ட்டையே செய்துள்ளனர். அனிருத் மழை பற்றியும் எல்நினோ பற்றியும் பேச டைரக்ட்டாக பாட்டு இருக்கா? இல்லையா? என நெல்சன் கேட்டு விடுகிறார்.

மேலும், அனிருத்தின் ஸ்டூடியோவில் உள்ள நண்பர்களிடம் அனிருத் பாஸ்போர்ட்டை அப்பவே எரிக்கவில்லை என்றும் ஒவ்வொரு வெளிநாட்டுக்காக டூர் அடித்து வருவதால் ஜெயிலர் 2 பாடல்கள் தாமதமாகி வருவதாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு தலைவன் தான்: ஹுகும் ஸ்டைலில் ஒரு அடி போட்டு இருக்கேன் என்று அனிருத் சொல்ல, அடியே வேண்டாம். இண்டர்நேஷனல் லெவல்ல ஒரு பாட்டு போடுங்க என நெல்சன் சொல்ல, அது நம்ம ஊர் ஸ்டைலிலும் இருக்க வேண்டும் என வழக்கம் போல குழப்பி விட கடைசியில் ரஜினிஸம் வேண்டுமே எனக் கேட்க, "இன்னைக்கும் என்னெனைக்கும் ஒரு தலைவன் தான்" என ஜெயிலர் 2 படத்தின் செகண்ட் சிங்கிளாக ஒன் சன் ஒன் மூன் ஒன் ரஜினி பாடல் வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

தள்ளிப்போன தனுஷ் படம்: தலைவர் படம் வரும் போது தனுஷ் படம் கண்டிப்பாக தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி வரை அக்டோபர் 16ம் தேதி என்றே ரிலீஸ் தேதியை ஓம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வந்தது. ஆனால், ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்கள் வெளியாகி வைரலான நிலையில், ஆயுத பூஜையும் இல்லை தீபாவளியும் இல்லை என கிறிஸ்துமஸ்ஸை குறி வைத்து தனுஷ் நகர்ந்துள்ளார்.