📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 18, 2026 09:03 AM

Jailer 2 Day 3 Box Office

Jailer 2 Day 3 Box Office

சென்னை: ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற அப்படம்; வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் Sacnilk இணையதளம்; ஜெயிலர் 2 மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

ரஜினியும், நெல்சன் திலீப்குமாரும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இதில் முதல் பாகத்தில் அடித்த ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்ணா மேனன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி, ஹிருத்திக் ரோஷன், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் புதிதாக உள்ளே வந்திருந்தார்கள். அனிருத்தான் இசையமைத்திருந்தார்.

படம் எப்படி?: படத்துக்கு ஆரம்பம் முதலே பெரிய ஹைப் இருந்தது. அதையெல்லாம் உணர்ந்து நெல்சன் தரமான வேலைகலை செய்திருந்தார். ரஜினிக்கு தேவையான மாஸ் ப்ளஸ் க்ளாஸ் உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் சரியான கலவையில் கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். இதன் காரணமாக அவர்கள் முதல் நாளிலிருந்தே படத்தை வெகுவாக கொண்டாட தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காமெடி பிளாஸ்ட்: நெல்சனுக்கு இருக்கும் பலங்களில் ஒன்று அவர் காமெடிகளை கையாளும் விதம். முதல் படத்திலிருந்து ஜெயிலர் 2 வரை தவறாமல் அதை சிறப்பாக செய்துவருகிறார். இந்தப் படத்தில் யோகிபாபுவைவிடவும் நமோ நாராயணா முதல் பாதியில் காமெடியில் ஸ்கோர் செய்துவிட்டார். எல்லோருமே அவரது நடிப்பை வெகுவாக பாராட்டி தள்ளிவிட்டார்கள். செஸ் விளையாடும் சீன் எல்லாம் இன்னும் பல காலத்துக்கு ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

கொஞ்சம் டல்: முதல் பாதி சரவெடியாக போன சூழலில்; இரண்டாவது பாதியிலும் படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு சென்றிருந்தார். அதில் ஆக்‌ஷன், சென்ட்டிமென்ட் போன்றவை இருந்தன. அவை முதல் பாதியை ஒப்பிடுகையில் கொஞ்சம் வேகம் குறைவுதான். இருப்பினும் ஒட்டுமொத்தமாக சொதப்பிவிடவில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஜெயிலர் 2 ரசிகர்களை இம்மியளவுகூட ஏமாற்றவில்லை. இதன் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. படத்தின் முடிவில் மூன்றாவது பாகத்துக்கான லீடையும் கொடுத்திருந்தார்கள். எனவே அதன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆஃபிஸ்: இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள் படி மூன்றாவது நாளான நேற்று அந்தப் படம் இந்தியாவில், 47 கோடியே 80 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். தமிழில் 34 கோடியே 60 லட்சம் ரூபாய், தெலுங்கில் எட்டு கோடியே 50 லட்சம் ரூபாய், ஹிந்தியில் நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய், கன்னடத்தில் 45 லட்சம் ரூபாயை வசூலித்ததாம். உலகளவில் அந்தப் படம் நேற்று 47 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். மொத்தம் மூன்று நாட்களில் அந்தப் படம் உலகளவில் 317 கோடியே 15 லட்சம் ரூபாயை அள்ளி 1000 கோடி க்ளப்பை நோக்கி படுவேகமாக சென்றுகொண்டிருக்கிறது.