📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 14, 2026 11:02 AM

Jailer 2 Box Office: கூலி வசூல் கன்ஃபார்ம் காலி.. ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு இதோ! வேறமாறி!

Jailer 2 Box Office: கூலி வசூல் கன்ஃபார்ம் காலி.. ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு இதோ! வேறமாறி!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படம் குறித்த இன்சைட் ரிப்போர்ட்டுகள் எல்லாம் படம் பக்கா பிளாக்பஸ்டர் என வந்துக் கொண்டிருக்கும் நிலையில், டிக்கெட் புக்கிங்கும் அனல் பறக்கின்றன.

முதல் நாள் காட்சிகள் மட்டுமின்றி முதல் வாரத்தின் பல்வேறு காட்சிகளும் இப்போதே ஹவுஸ்ஃபுல் ஆகி வருகின்றன. வெளிநாடுகளில் ஜெயிலர் 2 டிக்கெட் இந்திய மதிப்பில் 7 ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் வாங்கி ஓவர்சீஸ் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

வியாழக்கிழமையான நாளை பல ஊழியர்கள் இப்போதே மேனேஜர்களிடம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கத் தொடங்கி விட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரியளவில் புரமோஷன் இல்லை என்றாலும் சூப்பர் ஸ்டார் படம் என்கிற ஒன்றுக்காக மட்டுமே ரசிகர்கள் வெறித்தனமாக ஜெயிலர் 2 படத்தை பார்க்க காத்திருக்கின்றனர்.

நெல்சன் மீது நம்பிக்கை: கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் படங்களை இயக்கிய நெல்சன் கண்டிப்பாக ஜெயிலர் 2 படத்தை சொதப்பி இருக்க மாட்டார் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு நிறையவே உள்ள நிலையில் தான் ஜெயிலர் 2 படத்தை பார்க்க பெரும் ஆவலை காட்டி வருகின்றனர். எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்கரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், வித்யா பாலன், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமும் படத்தை பார்க்கத் தூண்டுகிறது. அனிருத் ஏற்கனவே பேங்கரான ஆல்பத்தைக் கொடுத்துள்ள நிலையில், ஜெயிலர் 2 நாளை காலை முதல் உலகம் முழுவதும் டிரெண்டாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி வசூலை முந்தும்: ஜன நாயகன், கருப்பு படங்களின் வசூல் எல்லாம் ஜுஜுபி என்றும் கூலி படத்தின் வசூலையே ஜெயிலர் 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதல் நாள் கூலி 150 கோடி வசூல் செய்த நிலையில், அந்த வசூல் சாதனையையும் ஜெயிலர் 2 முறியடிக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தியாவில் மட்டும் 90 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் வரும் என்றும் உலகளவில் 155 கோடி முதல் 160 கோடி முதல் நாள் வசூலாக வரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.