Jailer 2 Blue Sattai Maran Review
சென்னை: ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்களுக்கு; படம் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
ஜெயிலர் படத்தின் முதல் பாக வெற்றிக்கு பிறகு ஜெயிலர் 2வில் இணைந்திருக்கிறார்கள் ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும். பாட்ஷா, படையப்பா படங்களின் இரண்டாவது பாகங்களை எல்லாம் வேண்டாம் என்று சொன்ன ரஜினி; ஜெயிலர் இரண்டாவது பாகத்துக்கு மட்டும் எப்படி ஒத்துக்கொண்டார் என்ற கேள்வி பலருக்கும் இருந்திருக்கலாம். அதற்கு காரணம் நெல்சன் அமைத்த திரைக்கதை என்றே படம் பார்த்த பிறகு புரிந்தது. ஒவ்வொரு சீனையும் ரசிகர்கள் ரசிக்கும்படி வைத்து புகுந்து விளையாடியிருக்கிறார்.
ஜெயிலர் 2 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: படம் பார்த்த ரசிகர்கள் வெகுவாக கொண்டாடிவிட்டார்கள். முதல் நாளான நேற்றே 125 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறதாம் படம். இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "முதல் பாதியை பொறுத்தவரை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நல்ல காமெடியாக போனது. அந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்க காரணம் என்னவென்றால்; இந்தப் படத்தி இருக்க வேண்டிய தொய்வு எல்லாம் முதல் பாகத்திலேயே போய்விட்டது.
முதல் பாகத்தில் வாங்கிவிட்டோம்: நாம் இதில் வாங்க வேண்டிய அடியை எல்லாம் முதல் பாகத்திலேயே வாங்கிவிட்டோம். ஏனெனில் அதில்தான் ஒவ்வொரு கேரக்டருக்கும் இன்ட்ரோ கொடுக்க வேண்டியதாக இருந்தது. படத்தை ரொம்ப சொதப்பி வைத்திருந்தார்கள். இந்தப் படத்துக்கு அதெல்லாம் தேவைப்படவில்லை. அந்த கேரக்டர்களை நேரடியாக கதைக்குள் இறக்க முடிந்தது. எனவே கதை விறுவிறுப்பாக ஆரம்பித்துவிட்டது. விறுவிறுப்பாக தொடங்கிய படத்தை கலகலப்பாக மாற்றியது நமோ நாராயணா மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷன்தான். நமோவின் கேரக்டர் இந்தப் படம் முழுக்க பேசும்படி இருந்தது.
ரஜினி - நமோ காம்போ: குறிப்பாக, செஸ் விளையாடும் சீன் அல்டிமேட் காமெடி. படத்தில் வரும் சின்ன சின்ன ஆர்ட்டிஸ்ட்டுகள்கூட சூப்பராக ஸ்கோர் செய்திருந்தார்கள். நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டிய கேமியோ செய்த நடிகர்கள்தான் ஏன் வந்தார்கள் என்றே தெரியவில்லை. ஹிருத்திக் ரோஷன் கேமியோ தேவை இல்லாததுதான். ஆனால் அவரையும், அவரிடம் இருக்கும் 4 பெண்களையும் வைத்து ஒரு சண்டை காட்சி இருக்கும். அது அருமையாக இருந்தது. எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுக காட்சி சூப்பர். அத்றகு பிறகு எதையும் சொல்வது மாதிரி இல்லை.
ரஜினிக்கு இது சூப்பர் ஹிட் படம்: இரண்டாவது பாதியில்கூட படம் சீரியஸாகத்தான் இருந்தது. போர் அடிக்கவில்லை. ஆனால் முதல் பாதி அளவுக்கு இல்லை. படம் மேக்கிங்காகவும், டெக்னிக்கலாகவும் ஸ்ட்ராங்காக இருந்தது. கேமரா ஒர்க்கும் அற்புதம். முதல் பாதி அளவுக்கு பாடல்கள் இல்லை என்றாலும்; பின்னணி இசை எல்லாம் அருமையாக இருந்தது.இந்தப் படத்தின் முதல் பாதி சூப்பர் என்றே சொல்லலாம். இரண்டாவது பாதி மோசமில்லை என்றாலும் ஓகே ரகம்தான். மொத்தமாக பார்த்தால் இந்தப் படம் பெரும்பான்மையானவர்களுக்கு பிடிக்கும். ரொம்ப வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு இது சூப்பர் ஹிட் படம்.
படம் நன்றாகவே இருந்தது: ரஜினி சமீபகாலமாக நடித்த தோல்வி படங்கள் இருக்கின்றன. இந்தப் படம்தான் உண்மையான வெற்றி படமாக இருக்க முடியும். இருப்பினும் இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. அதாவது இதன் முதல் பாகத்தை பார்த்தால் இந்தப் படம் மேற்கொண்டு கனெக்ட் ஆகும். ஆனால் அதை பார்ப்பது கஷ்டம். இந்தப் படம் வந்தால் என்ன அடி அடிக்கிறோம் பார் என்று இருந்தார்கள். ஆனால் அடிக்கும் அளவுக்கு இந்தப் படம் இல்லை. படம் நன்றாகவே இருந்தது" என்றார்.