இவர பக்கத்துல வச்சிக்கிட்டு ஊழல் ஒழிப்பு பற்றி பேசுறீங்க.!! உங்க ஆட்சியே ஊழலில் தான் நடக்குது மறந்துட்டீங்களா
இவர பக்கத்துல வச்சிக்கிட்டு ஊழல் ஒழிப்பு பற்றி பேசுறீங்க.!! உங்க ஆட்சியே ஊழலில் தான் நடக்குது மறந்துட்டீங்களா
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வழக்கறிஞர் பரந்தாமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நேற்றைய பிரச்சாரத்தின் போது முதல்வர் விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக-வை எதிர்த்து எப்போதாவது முதல்வர் விஜய் பேசிருக்கிறாரா என திமுக வேட்பாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து பேசிய பரந்தாமன், என்றாவது தவெக அரசின் சாதனையை சொல்லி விஜய் ஓட்டு கேட்டதுண்டா? என்றார்.
மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு விஜய் ஊழலை பற்றி பேசலாமா. அதே போல 100 நாள் வேலை கிராமங்களில் இல்லை, இதற்கு காரணமான விபி ஜி ராம் ஜி திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தியவர் விஜய் தான் என்றும் பரந்தாமன் சாடியுள்ளார். தேவையற்ற பல விவகாரங்கள் குறித்து சம்பந்தமே இல்லாமல் வாய் திறந்து பேசும் முதல்வர் விஜய்க்கு, விலைவாசி உயர்வால் மக்கள் படும் அவஸ்தை பற்றி தெரியுமா? ஆனால் ரீமேக் படம் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும் பேசினார்.
அதே போல ஊழலைப் பற்றி பேசும் முதலமைச்சர், பக்கத்தில் மரகதம் குமரவேலை வைத்து கொண்டு பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது. இந்த ஆட்சியே ஊழலின் மீது தான் நடக்கிறது என்பதனை அவர் மறந்துவிட்டார் போல. ஊழலை ஒழிப்பதைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது?இருக்ககூடிய அரசியல் கட்சிகளிலேயே தீய சக்தி என்றால் தவெக- தான்" என்று கடுமையாக சாடியுள்ளார்.