Politics
September 24, 2026 11:04 PM
இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆரத்தி; பணம் வினியோகத்தால் பரபரப்பு
தாராபுரம்: இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரத்தில், பிரசாரத்துக்கு செல்லும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு, தி.மு.க. நிர்வாகி தட்டில் பணம் வினியோகம் செய்ததாக பரபரப்பு எழுந்துள்ளது.
தாராபுரம், தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, மூலனுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட புஞ்சை தலையூர், வேளாண்பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் கட்சியினருடன் வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அவரை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது, வேட்பாளருடன் வந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர், ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டில் பணம் வைத்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு கட்சியினர் பணம் வினியோகம் செய்ததாக கூறப்படும், வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
Politics