📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 27, 2026 08:03 AM

IND vs WI 1st ODI: வானிலையால் சிக்கல்.. போட்டி முழுதாக நடக்குமா?.. திருவனந்தபுரம் மழை நிலவரம்

IND vs WI 1st ODI: வானிலையால் சிக்கல்.. போட்டி முழுதாக நடக்குமா?.. திருவனந்தபுரம் மழை நிலவரம்

IND vs WI 1st ODI: வானிலையால் சிக்கல்.. போட்டி முழுதாக நடக்குமா?.. திருவனந்தபுரம் மழை நிலவரம்

திருவனந்தபுரம்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் சர்வதேச களத்திற்குத் திரும்புவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், கேரளாவில் நிலவும் வானிலை ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுமா என்ற கவலை எழுந்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஆட உள்ள முதல் போட்டி அன்றும் திருவனந்தபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் போட்டியின் போது நாள் முழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பும் பல போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் மழையால் நடக்காமல் கைவிடப்பட்டு இருப்பதால் இந்தப் போட்டிக்கும் அந்த நிலை ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வானிலை அறிக்கையின்படி, போட்டி தொடங்கும் பிற்பகல் 2:00 மணி அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 50 சதவீதமாக உள்ளது. மதியம் 1:00 மணி மற்றும் மாலை 4:00 மணியளவில் 45 சதவீதமும், மாலை 6:00 மணியளவில் 35 சதவீதமும் மழை பெய்யக்கூடும். இரவு 8:00 மணிக்கு மேல் மழைக்கான வாய்ப்பு 25 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

மதியம் டாஸ் போடும் நேரத்திலும் முதல் பாதியிலும் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். எனினும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை படிப்படியாகக் குறையும் என்பதால் போட்டி முற்றிலும் கைவிடப்பட வாய்ப்பில்லை.

இந்தப் போட்டிக்கு மாற்று நாள் ஒதுக்கப்படவில்லை. மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும். சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.