📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 20, 2026 09:32 PM

IND vs AFG: 1078 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை.. ரோகித், பிரசித் கிருஷ்ணா மகத்தான ஹாட்ரிக் சாதனை

IND vs AFG: 1078 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை.. ரோகித், பிரசித் கிருஷ்ணா மகத்தான ஹாட்ரிக் சாதனை

IND vs AFG: 1078 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை.. ரோகித், பிரசித் கிருஷ்ணா மகத்தான ஹாட்ரிக் சாதனை

சென்னை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இணைந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அரிய சாதனையைப் படைத்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஆனால், இன்னிங்ஸின் தனது முதல் ஓவரிலேயே பிரசித் கிருஷ்ணா விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஃபார்மில் இருக்கும் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸை 5 ரன்களில் அவர் ஆட்டமிழக்கச் செய்ய, விக்கெட் கீப்பருக்கு அருகில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மா அந்தச் சிறப்பான கேட்ச்சை பிடித்தார்.

குர்பாஸ் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை தட்டிவிட முயன்றபோது, பந்து பேட்டின் outside edgeல் பட்டு நேராக ரோஹித்திடம் சென்றது. இது இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தனது துல்லியமான பந்துவீச்சு மற்றும் லைன் லெங்த் மூலம் ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார் பிரசித். ஆறாவது ஓவரில், அவர் மீண்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த முறை ரஹ்மத் ஷாவை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போதும் ரோஹித் சர்மாவே அந்த கேட்ச்சை நேர்த்தியாகப் பிடித்தார்.

ரஹ்மத் லெக் சைடு திசையில் பந்தை அடிக்க முயன்றார், ஆனால் பந்து பேட்டின் மேல் விளிம்பில் பட்டு மேலே எழும்ப, அதை ரோஹித் பாதுகாப்பாகப் பிடித்தார்.எட்டாவது ஓவரில் பிரசித்-ரோஹித் கூட்டணி கேட்ச்களில் ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தது. இப்ராஹிம் சத்ரான் இவர்களின் மூன்றாவது இரையானார்.

அவர் பந்தை உடலுக்கு வெளியே தட்டிவிட முயன்றபோது, பந்து எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித்திடம் சென்றது. அங்கு ரோஹித் இந்த இன்னிங்ஸின் தனது மூன்றாவது கேட்ச்சை வெற்றிகரமாகப் பிடித்தார்.

இந்த மூன்று விக்கெட்டுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முறையில் வீழ்ந்தன. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்துகள் பேட்டின் விளிம்பில் பட, ஸ்லிப் திசையில் நின்ற ரோஹித் சர்மா மீதமுள்ள வேலையைச் சரியாகச் செய்து முடித்தார்.

இந்த அசத்தலான கூட்டணி இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளது. இந்தியா விளையாடியுள்ள 1,078 ஒருநாள் போட்டிகளில், ஒரு இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயெ முதல் மூன்று விக்கெட்டுகளையும் ஒரே பந்துவீச்சாளர் மற்றும் ஃபீல்டர் கூட்டணி வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு இந்திய அணியின் ஃபீல்டர் ஒருவர் ஒரே பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் மூன்று கேட்ச்கள் எடுத்த நிகழ்வுகள் நடந்திருந்தாலும், இன்னிங்ஸின் தொடர்ச்சியான முதல் மூன்று விக்கெட்டுகளும் இவ்வாறு வீழ்ந்தது கிடையாது.

இந்திய ஒருநாள் போட்டிகளில் ஒரே பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் ஃபீல்டர் எடுத்த மூன்று கேட்ச்கள்: