📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 05, 2026 07:03 AM

Immortal Prashanth's Review

Immortal Prashanth's Review

சென்னை: ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இம்மார்ட்டல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் இதன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிற வைத்த சூழலில்; அந்த ஹைப்போடு பலரும் படம் பார்த்து வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்து பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறர்.

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இம்மார்ட்டல். இது இந்தியாவில் இதுவரை பெரிய அளவில் படங்கள் வராத; வாம்ப்பயர் ஜானரில் உருவாகியிருக்கிறது. அதாவது த்ரில்லர், ஃபேன்டஸி, ஹாரர் ஆகிய ஜானர்களை ஒன்று சேர்த்ததுதான் மேற்கூறிய வாம்ப்பயர் ஜானர். இந்த விஷயமே படத்துக்கு ஓரளவுக்கு ஹைப்பை உருவாக்கிவிட்டது. அதோடு சேர்ந்து ட்ரெய்லரில் கயாடு லோஹரின் கவர்ச்சியும் கவனம் ஈர்த்தது.

இம்மார்ட்டல் பிரசாந்த் விமர்சனம்: இன்று தியேட்டர்களில் வெளியான படத்தை ரசிகர்கள் பார்த்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸையே கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "இம்மார்ட்டல் படத்தின் மூலம் மாரியப்பன் சின்னா என்ற நல்ல இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். இப்படி ஒரு படம் எழுதுவதற்கே பெரிய யோசனை செய்ய வேண்டியிருக்கும்.

ஒர்க் அவுட் ஆகுது: காதல், ஃபேமிலி இதனால்தான் ஹிட் ஆகும் என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிஜி நிறைய இருக்கும் படம் ரொம்ப அபாயம். ஏன் என்றால் அதை யோசித்துவிடலாம். ஆனால் அதை வெளியே கொண்டு வருவது சிரமம். இந்தப் படத்தின் பெரிய ஆச்சரியம் சிஜிதான். நிறைய இடங்களில் அது சிஜி என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் இது பெரிய பட்ஜெட் படம் இல்லை. லிமிட் பட்ஜெட்தான். நிறைய இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

கயாடு அறிமுகம்: ஜிவி பிரகாஷுக்கு இது வித்தியாசமான படம். ரெகுலரான படமாக இருக்கும் என நினைத்தேன். இது எந்த மீட்டரிலும் இல்லை. ஆங்காங்கே அப்சஸன் சாயல் இருக்கும். இருப்பினும் சிரிப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. கயாடு லோஹருக்கு இதுதான் முதல் படம். சிஜி பணிகளால் படம் தாமதம். எனவே அதற்கு முன்னதாக பல படங்கள் ரிலீஸாகிவிட்டன. இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் பெர்ஃபார்மன்ஸ் பியூட்டிஃபுல். சில இடங்களில் சிங்கிள் ஷாட்டில் எல்லாம் நடித்திருக்கிறார்.

சாம் சிஎஸ்: எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட்டில் சரியாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அந்த லாஜிக்கை எங்கேயும் மிஸ் செய்யவில்லை. இதில் பெரிய ஓட்டை எதுவும் இல்லை. அது மிகப்பெரிய ப்ளஸ். படத்தில் இன்னும் கொஞ்சம் காமெடி இருந்திருக்கலாம். யோகி பாபு போன்றோரை உள்ளே கொண்டு வந்திருந்தால் இந்தப் படத்தின் மீட்டரே வேறாக இருந்திருக்கும். படம் ரொம்ப என்கேஜிங்காக இருக்கிறது. சாம் சி.எஸ் பிரித்து மேய்ந்துவிட்டார்.

அவர் சர்வதேச அளவில் இசை கொடுத்திருக்கிறார். இரண்டு மணி நேரத்துக்கு மேல் கொஞ்சம்தான் படம் ஓடுகிறது. ரொம்ப சரியாகவும் இருக்கிறது. இது புது ஃப்ளேவரில் இருக்கிறது. படத்தில் மினிமம் கிளாமர்தான் இருக்கிறது. அசிங்கம் இல்லை. ஜிவி பிரகாஷுக்கு கடந்த ஒரு வருடத்தில் வந்த படங்களில் இதுதான் நல்ல படம். குடும்பத்தோடு சென்று பாருங்கள்" என்றார்.