📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 02, 2026 10:30 AM

Gold Rate Today : நகைப்பிரியர்களுக்கு குஷியா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold Rate Today : நகைப்பிரியர்களுக்கு குஷியா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold Rate Today : நகைப்பிரியர்களுக்கு குஷியா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold Rate Today : வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வகையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் விலையானது கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் எதிர்பாராத உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2020ஆம் வருடம் ஒரு சவரன் 30 முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலையானது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்க நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு சவரன் 1லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சத்தை தாண்ட வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் ஒன்று 14,500 ரூபாய்க்கும், சவரன்1,16,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளி விலையும் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்று