📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 18, 2026 02:02 AM

GOLD PRICE TODAY : ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! சவரன் ரூ. 2,400 உயர்வு

GOLD PRICE TODAY : ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! சவரன் ரூ. 2,400 உயர்வு

ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.

5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது.

7-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 8-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையானது. 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,965-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில தினங்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,620

09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720

08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720

07-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

06-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000

10-08-2026- ஒரு கிராம் ரூ.250

09-08-2026- ஒரு கிராம் ரூ.250

08-08-2026- ஒரு கிராம் ரூ.250

07-08-2026- ஒரு கிராம் ரூ.250

06-08-2026- ஒரு கிராம் ரூ.250