📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 04, 2026 06:02 AM

Gold and silver rate today :தங்கம் வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! ஒரு சவரனுக்கு ரூ.2,360 சரிந்தது

Gold and silver rate today :தங்கம் வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! ஒரு சவரனுக்கு ரூ.2,360 சரிந்தது

Gold and silver rate today :தங்கம் வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! ஒரு சவரனுக்கு ரூ.2,360 சரிந்தது- மிஸ் பண்ணாதீங்க- விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நிலையற்ற தன்மையாக 4 நாட்கள் அதிகரித்தால் 2 நாட்கள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று வாரத்தின் கடைசி நாளில் தங்கத்தின் விலையானது அதிரடியாக சரிந்துள்ளது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான ஆ,ர்வம் இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையானது உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் பங்குச்சந்தையில் முதலீடு பாதுகாப்பற்ற நிலை இருப்பதால், தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மக்கள் கருதுவதால் அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாக தங்கத்தை கருதுகிறார்கள், இதனால் தங்களின் குறைவான ஊதியத்தில் கூட சிறுக சிறுக சேகரித்து தங்க நகைகளை ஒரு கிராம், இரண்டு கிராம் என வாங்கி வருகிறார்கள். மேலும் தங்கம் அத்தியாவசிய தேவைக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாகவும் மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது ஏறி இறங்கும் நிலையில், இன்று கிராம் ஒன்றுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,360 குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி