📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 09, 2026 10:30 AM

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை-

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை-

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது திடீரென அதிகரித்துள்ளது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

தங்கம் விலை - அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் எப்போதும் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 35 முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியது

தங்கம் விலை ஏறி இறங்க காரணம் என்ன.?

வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதற்கு போட்டியாக அமெரிக்காவும் ஹார்மூஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயும் உரிய முறையில் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். எனவே இது தான் நல்ல சான்ஸ் என முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது அதிகளவு முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று திடீரென ஈரான்- இஸ்ரேல் இடையே போரை நிறுத்த அமெரிக்க அதிபர் உத்தரவிட்ட நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 270 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி