📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 19, 2026 12:03 AM

சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்

சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்

ரியாத்: சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

சவூதி அரேபியாவில் ரியாத் விமான நிலையம் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது யேமனின் ஹூதி கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் மேற்காசியாவில் பதற்றம் நீடித்து வருகிறது.

ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கின்றன. அங்குள்ள இந்தியர்கள் நிலைமை என்ன என்பது பற்றிய கவலைகளும் எழுந்தன.

இந் நிலையில், இந்திய சமூகத்தினர் பாதுகாப்பாக இருக்குமாறு சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு;

சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் தற்போது நிலவும் சூழல்களுக்கு ஏற்ப முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வான்வழி தாக்குதல்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குள் (கட்டடம் உள்ளே அல்லது உள்அறைகளில்) சென்றுவிட வேண்டும்.

தாக்குதல் நிகழ்வுகளை பற்றிய தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்களை படம்பிடிப்பது, வெளியிடுவது அல்லது பகிர்வதை தவிர்க்க வேண்டும். இந்தியர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளை தூதரக அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ரியாத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.தமாம், ஜெட்டா, மதீனா விமான நிலையங்கள் இயங்குகின்றன. சில இடையூறுகள் இருப்பதால், சில விமான நிறுவனங்கள் சேவைகளை நிறுத்தி வைப்பதை நீட்டித்துள்ளன.

அவசரமாக செல்ல வேண்டிய இந்தியர்கள், பஹ்ரைன், குவைத் அலலது கத்தார் வழியாக பயணிக்கலாம். உம்ரா உள்பட சவூதி அரேபியா பயணத்தை திட்டமிடும் இந்தியர்கள் அங்கு நிலவும் சூழல்களின் அடிப்படையில் தங்கும் காலம் நீட்டிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இந்திய தூதரகம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.