📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka September 20, 2026 07:04 PM

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை மீட்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி. கோரிக்கை

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை மீட்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி. கோரிக்கை

இலங்​கை எம்.பி மனோ கணேசன், அனோஜன் சிவ​ரா​சா

கொழும்பு: இலங்​கை​யின் யாழ்ப்​பாணத்தை சேர்ந்த இந்​துக்​கள் சில மாதங்​களுக்கு முன்பு கதிர்​காமம் முரு​கன் கோயிலுக்கு புனித பாத யாத்​திரையை மேற்​கொண்​டனர். அவர்​களோடு சுப்பிரமணி​யம் என்று பெயரிடப்​பட்ட நாயும் சென்​றது. அந்த நாயை, முஸ்​லிம் இளைஞர் ஒரு​வர் தாக்​கி​னார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர் கைது செய்​யப்​பட்​டு ஜாமீனில் விடுதலையானார்.

ஆனால் இந்த விவ​காரம் இலங்கை சமூக வலை​தளங்​களில் பெரும் விவாதப்​பொருளாக மாறியது. சவுதி அரேபி​யா​வில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவ​ரா​சாவும் சமூக வலைதள விவாதத்​தில் பங்​கேற்று பதிவு​களை வெளியிட்டு வந்​தார். அப்​போது நபிகள் நாயகம் குறித்து அவர் அவதூறாக விமர்​சனம் செய்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக சவுதி போலீஸார் அவரை கைது செய்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த சவுதி அரேபிய நீதி​மன்​றம் அவருக்கு 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், ரூ.7.55 கோடி அபராத​மும் விதித்​தது. இதை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதனை விசா​ரித்த நீதி​மன்​றம் அனோஜன் சிவ​ரா​சாவுக்கு மரண தண்​டனை விதித்து தீர்ப்​பளித்து உள்​ளது.

இந்த சூழலில் இலங்​கையை சேர்ந்த தமிழ் முற்​போக்கு கூட்​ட​ணி​யின் தலை​வரும் எம்.பி.​யு​மான மனோ கணேசன் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “இந்​திய பிரதமர் நரேந்​திர மோடிக்​கும் சவுதி அரேபிய பட்​டத்​துக்கு இளவரசர் சல்​மானுக்​கும் இடையே மிக நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. எனவே இலங்கை அதிபர் அனுர குமார தி​சா​நாயக்க தனிப்​பட்ட முறை​யில் பிரதமர் மோடி​யிடம் பேச வேண்​டும். அவரது உதவி​யுடன் அனோஜன் சிவ​ரா​சாவை மீட்க வேண்​டும்​” என கூறியுள்ளார்​.