சவுதி விமான நிலையம் மீது ஹவுதிக்கள் மீண்டும் தாக்குதல்.. இந்தியாவிலிருந்து விமான சேவைகள் நிறுத்தம்
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது கடந்த புதன்கிழமை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விமான கேப்டன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
இதில் பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஏவுகணை தாக்குதலால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கட்டுப்பாடு
விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் நேரடியாக விமான நிலவரத்தைச் சரிபார்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பதற்றமான சூழ்லால சவுதி அரேபியாவுக்கான விமான சேவையை இந்திய விமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தயுள்ளன.
ஏமன் உள்நாட்டு போர்
ஏமனில் உள்ள பல பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரச படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
ஏமன் அரச படைகளுக்கு சவுதி அரேபியா உதவி வருகிறது. ஹவுதிக்கள் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக போர் தீவிரமடைந்து வருகிறது.
இதன்மூலம் ஏமனில் ஈரான், சவுதி அரேபியா மறைமுக மோதலில் ஈடுபட்டுள்ளன.
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.