📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 14, 2026 08:04 PM

சவூதி விமான நிலைய தாக்குதல்: இந்தியர்களுக்கு உதவி எண்

சவூதி விமான நிலைய தாக்குதல்: இந்தியர்களுக்கு உதவி எண்

ரியாத்: சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் அனைத்துலக விமான நிலையத்தைக் குறிவைத்து ஈரான் ஆதரவுபெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஓர் இந்தியர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர், 11 இந்தியர்கள் காயமடைந்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த விமான நிலையம் அக்டோபர் 17ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சவூதியிலிருந்து தாயகம் திரும்ப விரும்புவோர் கத்தார், பஹ்ரேன் போன்ற பிற வளைகுடா நாடுகள் வழியாகப் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியர்களின் உதவிக்காக 24 மணி நேரத் தூதரகக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர் +966-1 1-488469 என்ற தொலைபேசி எண் அல்லது +966-536216082 என்ற வாட்ஸ்அப் எண் வழியாகத் தொடர்புகொள்ளலாம்.

ஜெடா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய உம்ரா பயணிகளுக்கும் ஜெடாவில் உள்ள இந்தியத் துணைத்தூதரகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.