📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 04, 2026 04:03 AM

சட்டசபையில் மானியக்கோரிக்கை மீது எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விவாதம்

சட்டசபையில் மானியக்கோரிக்கை மீது எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விவாதம்

காவலர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள், ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் ஓராண்டு முன்பே பணியிடத்தை நிரப்புங்கள் என கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

* நாங்கள் எதிர்க்கட்சிகள் தான் எதிரி கட்சிகள் இல்லை. கடந்த 2 மணி நேரத்தில் விவாதம் மட்டும் நடந்து வருகிறது.

* இன்று சட்டசபையில் உதயநிதி மட்டும் தான் பேசியிருக்கிறார். எந்த உறுப்பினரும் பேசவில்லை.

* இது சட்டசபை, சண்டை சபை இல்லை.

* தங்களுக்கான அறிவிப்புகள் வரப்போகிறது என ஆயிரக்கணக்கான காவலர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

* காவல்துறைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் என்றார்.

இதற்கிடையே குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், நான் 2 மணி நேரம் பேசவில்லை. வெறும் 35 நிமிடங்கள் தான் பேசி உள்ளேன் என அக்கா பிரேமலதாவிற்கு கூறிக்கொள்கிறேன் என்றார்.

இதையடுத்து பேச்சை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்,

* காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* காவல்துறையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி புதியவர்களை நியமிக்க வேண்டும்.

* 8 மணி நேரம் வேலை, வார விடுப்பு போன்றவற்றை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.

* திருநங்கைகள் மிகவும் தைரியமானவர்கள், அவர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேர்க்க வேண்டும்.

* அதிக வழக்குகளை கையாளும் காவல்நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.

* போக்குவரத்து காவலர்களுக்கு உணவு, பழச்சாறு, கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

* உலகத்தரத்தில் தமிழ்நாடு காவல்துறையினருக்கு சீருடை வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

* கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக கணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது.

* அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.

* எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது.

* திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்.

* அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.

* மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.

* அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

* காவலர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள், ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் ஓராண்டு முன்பே பணியிடத்தை நிரப்புங்கள்.

* காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

* காவல் ஆய்வாளர்கள் பலர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும்.

* பெண் காவலர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.

* காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக ஆட்சியில் அளித்தது போல தவெகவும் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

* காவல் நிலையங்களின் உள்ளே 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சாலைகளில் உள்ள சிசிடிவி-களில் தூசுகள் படிந்து பதிவுகள் முறையாக கிடைப்பதில்லை, அதை பராமரிக்க வேண்டும்.

* சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை சரி செய்ய வேண்டும்.

* மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது, அதை தடுக்க வேண்டும் என்றார்.