📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 21, 2026 10:03 AM

சபாநாயகர் ஆக் ஷன் சொன்னதும் முதல்வர் டயலாக் பேசுகிறார்: உதயநிதி விமர்சனம்

சபாநாயகர் ஆக் ஷன் சொன்னதும் முதல்வர் டயலாக் பேசுகிறார்: உதயநிதி விமர்சனம்

சென்னை: ''தமிழகம் இன்று, சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது,'' என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில், தி.மு.க., நிர்வாகி திருமணத்தை, உதயநிதி நேற்று நடத்தி வைத்தார். திருமண விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகம், இன்றைக்கு ஒரு சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டு இருக்கிறது. முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் மின்வெட்டு காரணமாக, தினமும் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

'இந்த ஆட்சியில் இரண்டு பேருக்கு தான் போட்டி; ஒன்று மின்வெட்டு, இன்னொன்று அரிவாள் வெட்டு' என இன்றைய முதல்வரின் பாணியிலேயே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மிகச் சிறப்பாக சொன்னார்.

சட்டசபையில் கேள்வி கேட்டால், ஆளுங்கட்சியினர் பாட்டு பாடுகின்றனர். சட்டசபைக்கு வந்திருக்கிறோமா, 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என சந்தேகம் எழுகிறது. இன்னும் 'பைட், டான்ஸ்' மட்டும் தான் பாக்கி உள்ளது.

முதல்வர், வாயை திறப்பதே இல்லை; திறந்தால், வெறும் 'பஞ்ச்' டயலாக் தான். அதுவும் எங்களை பார்த்து பேசாமல், 'கேமரா ஆங்கிள்' எல்லாம் பார்த்து, 'டேக்' போகலாமா என சபாநாயகரிடம் கேட்டு, அவர் 'ஆக் ஷன்' சொன்னதும், முதல்வர், 'பஞ்ச் டயலாக்' பேசுகிறார்.

'என் டேபிளில் மூன்று பைல் இருக்கு; ஓபன் பண்ண வச்சிராதீங்க' என முதல்வர் 'டயலாக்' பேசினார். 'தயவு செய்து சீக்கிரம் ஓபன் பண்ணுங்க; உடனே நடவடிக்கை எடுங்க' என்றேன். இதுவரை பதில் இல்லை.

'ஆட்சிக்கு வந்து விட்டோம்' என்பதையே, முதல்வர், அமைச்சர்கள் உட்பட, அவர்களே இன்னும் நம்பவில்லை. அவர்களுக்கு, 106 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். தி.மு.க., ஆட்சியின் சாதனையை சொல்லி வெற்றி பெற்றவர்கள் ஆதரவில் தான் இந்த ஆட்சி நடக்கிறது.

அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க்களை விலைக்கு வாங்கியதால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆட்சியாளர்கள் அடிக்கும் கூத்து, அட்டூழியங்களை மக்களுக்கு தொடர்ந்து அம் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.