📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 10, 2026 04:31 PM

சினிமாவில் இதுவரை பார்க்காத கடல் சண்டை.. தியேட்டரை தெறிக்கவிட்ட சூரி.. மண்டாடி ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் இதுவரை பார்க்காத கடல் சண்டை.. தியேட்டரை தெறிக்கவிட்ட சூரி.. மண்டாடி ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

முதல் பாதி மாஸ்: படம் பார்த்த வசந்த் ராஜ் என்பவர் தனது எக்ஸ் தளத்தில்,18 நிமிடம்மண்டாடி முதல் பாதி பயர். இடைவேளைக்காட்சி வேற லெவல் சம்பவமாக இருந்தது. சண்டை காட்சிகள் மிக சிறப்பாக அமைந்துள்ளன. திரையில் சூரியின் ஆளுமை அபாரம் ஒரு பெரிய நட்சத்திர நாயகனுக்கு இணையாக தனித்து தெரிகிறார்.மேலும், சுஹாஸ் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பின்னணி இசையில் ஜிவி பிரகாஜின் மிரட்டியுள்ளார். இரண்டாம் பாதி அதிரடியாக இருக்கப்போகிறது என படத்தை பாராட்டி உள்ளார்.

கடல் சண்டை மாஸ்: மண்டாடி திரைப்படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில், முதல் காட்சியிலிருந்தே மண்டாடி படம் உங்களை அதன் உலகத்திற்குள் நேரடியாக இழுத்துச் செல்கிறது. சூரி மற்றும் சுஹாஸ் இடையிலான சண்டைகாட்சி, உணர்வுப்பூர்வமான ஃப்ளாஷ்பேக் மற்றும் ஜி.வி-யின் பின்னணி இசை ஆகியவை வேற லெவல். கடலில் படகில் நடக்கும் சண்டைக் காட்சிகள் இந்திய சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத ஒன்று என பாராட்டி உள்ளார்.

இதுவரை பார்த்திராத கடல் சண்டை: பவன் என்பவர், ஆரம்பம் முதல் முடியும் வரை உச்சக்கட்ட காட்சியால் படம் நம்மை உபசரிக்கிறது. சூரி vs ஷுஹாஸ் இவர்களுக்கு இடைவேளை படகு பந்தய சீக்வென்ஸ் அதிரடியாக இருக்கிறது. மண்டாடி முதல் பாதி சூரி தெரிக்கவிட்டு இருந்தார். படத்தின் இரண்டாம் பாதி ஃபிளாஷ் எமோஷன்ஸ் என படத்தை பாராட்டி உள்ளார்.

பார்க்க வேண்டிய படம்: மற்றொருவர், கடலில் நடக்கும் உண்மையான சண்டை, இடைவேளை சண்டை மற்றும் படகு பந்தய எபிசோட் உச்சகட்டமாக இருந்தது. மேலும் ஜிவி பிரகாஷின் BGM தியேட்டரில் கூஸ்பம்பை வரவைக்கிறது. படம் பார்த்த மற்றொருவர் நாம் இதுவரை திரையில் பார்த்திராத கடல் சண்டை காட்சிகள் பிரம்மிக்காக இருக்கின்றன. மண்டாடி படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். சுஹாஸ், சூரி, சத்யாரா, மஹிமா நம்பியார் என ஒவ்வொருவரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள். தியேட்டரில் பார்க்க ஒரு பெர்ஃபெக்டான திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.

அதிரடியான க்ளைமாக்ஸ்: படம் பார்த்த மற்றொரு ரசிகர் மண்டாடி பபடத்திற்கு 4.5 ஸ்டார் கொடுத்து இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதி பயராக இருக்கிறது. படத்தின் மிகச்சிறந்த பகுதிகள் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் வருகிறது. சற்று நீளமான ஃப்ளாஷ்பேக் காட்சிக்குப் பிறகு, திரைக்கதை மீண்டும் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக, பிரம்மாண்டமான படகுப் பந்தயக் காட்சியுடன் அமையும் க்ளைமாக்ஸ், கண்டிப்பாகப் பெரிய திரையில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. படம் முழுவதும் சூரி மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை உறுதியுடன் தாங்கிப் பிடிக்கிறார். அதேவேளையில் Suhas தனது அறிமுகப் படத்திலேயே மிக சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். இவர்கள் இருவரும் மண்டாடி படத்தின் உலகத்தோடு முழுமையாக ஒன்றிப்போயுள்ளனர்.

காட்சி பிரம்மாண்டம், தயாரிப்பு தரம் மற்றும் ஜிவியின் துள்ளலான பின்னணி இசை ஆகியவை பந்தயக் காட்சிகளை ஒரு சிறந்த விருந்தாக மாற்றுகின்றன. அந்த க்ளைமாக்ஸ் படகுப் பந்தயக் காட்சி திரையரங்கில் ஒரு அதிரடி அனுபவத்தைத் தருகிறது. மெய்சிலிர்க்க வைக்கும் தருணமாக உள்ளது. கணிக்ககூடிய மோதல்கள் மற்றும் வழக்கமான உணர்வுப்பூர்வமான காட்சிகள் சில இடங்களில் படத்தை சற்றே தொய்வடையச் செய்தாலும், மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அந்த இரண்டு படகு பந்தயக் காட்சிகளும் அந்தக்குறையை முழுமையாக ஈடுசெய்துவிடுகின்றன. மொத்தத்தில் மண்டாடி ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்தை தருகிறது.