📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 21, 2026 03:04 PM

சிங்கப்பூர் உணவங்காடி நிலையங்கள்: தூய்மைப் பணிகளுக்காக மூடல்

சிங்கப்பூர் உணவங்காடி நிலையங்கள்: தூய்மைப் பணிகளுக்காக மூடல்

சுத்தம் செய்வதற்காகச் சிங்கப்பூர் முழுவதும் உள்ள மொத்தம் 15 உணவங்காடி நிலையங்கள் செப்டம்பர் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் ஒன்று முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படும்.

பொதுமக்கள் சுத்தமான, சுகாதாரமான சூழலில் கட்டுப்படியான விலையில் உணவை உண்டு மகிழ்வதை உறுதிசெய்யவே இத்தகைய வழக்கமான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் உணவங்காடி நிலையங்களில் தேக்கா நிலையம், ஹாலந்து வில்லேஜ் சந்தை, உணவங்காடி நிலையம், ஜூரோங் வெஸ்ட் உணவங்காடி நிலையம் உள்ளிட்டவை அடங்கும்.

மேலும், தோ பாயோ லோரோங் 7ல் உள்ள கிம் கியட் பாம் சந்தை, உணவங்காடி நிலையத்திலும் புளாக் 726 கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் இருக்கும் உணவங்காடி நிலையத்திலும் தற்போது பழுதுபார்ப்பு, புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்பணிகள் முறையே டிசம்பர் 13, டிசம்பர் 27 ஆகிய தேதிகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் மொத்தம் 123 சந்தைகளும் உணவங்காடி நிலையங்களும் உள்ளன.