சிங்கப்பூர் காற்றுத்தரம்: மத்திய பகுதியில் மேம்பாடு
சிங்கப்பூரில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. தீவின் மத்தியப் பகுதியில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (PSI) மிதமான நிலைக்குத் திரும்பியுள்ளது.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) காலை 7 மணி நிலவரப்படி, மத்தியப் பகுதியில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 97 ஆக இருந்தது.
51 முதல் 100 வரையிலான குறியீடு என்பது மிதமான நிலை ஆகும்.
தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத் தகவல்படி, மத்தியப் பகுதி என்பது தாம்சன், மேரிமவுண்ட், சின் மிங், அங் மோ கியோ, பீஷான், சிராங்கூன் கார்டன்ஸ், மெக்ரிச்சி, தோ பாயோ ஆகிய பகுதிகள் ஆகும்.
புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு 1 மணி முதல் காற்றின் தரம் மேம்பட்டு குறியீடு 100க்குக் கீழ் குறைந்தது.
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் செப்டம்பர் 16 முதல் குறியீடுகள் மிதமான அளவிலேயே தொடர்ந்து காணப்படுகின்றன.
காற்றில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவைக் குறிக்கும் ஒரு மணி நேர பிஎம்2.5 (PM2.5) குறியீடும், அனைத்துப் பகுதிகளிலும் இயல்பான நிலையிலேயே இருந்தன.
24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இத்தகைய காலகட்டங்களில், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.