📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 30, 2026 12:03 AM

சென்னையில் பதற்றம்... திடீரென பட்டினப்பாக்கத்தை சுற்றி வளைத்த போலீஸ்.!

சென்னையில் பதற்றம்... திடீரென பட்டினப்பாக்கத்தை சுற்றி வளைத்த போலீஸ்.!

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

தமிழ்நாட்டில் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்தது தமிழக அரசு. இதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அப்பகுதியில் வாழும் மீனவ மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செப்டம்பர் 29) எண்ணூர் முதல் கோவளம் வரையிலான மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தன.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டினப்பாக்கத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1200 ஏக்கர் பரப்பளவில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை கட்டுப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தவெக கூட்டணி கட்சிகளே அரசின் இந்த முடிவுக்கு எதிராக நின்றன.

குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பட்டினப்பாக்கத்தில் ஏற்கனவே போராட்டங்களை நடத்தின. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) எண்ணூர் முதல் கோவளம் கடற்கரை வரை வசிக்கும் அனைத்து மீனவ கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் விதமாகவும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கவும் பட்டினப்பாக்கத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக திமுக ஆட்சகயில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சென்னை ஓமந்தூரில் புதிய தலைமை செயலகத்தை கட்டினார். ஆனால் அதற்கு அடுத்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக வந்த போது புதிய தலைமை செயலக கட்டிடத்தை அரசு பொது மருத்துவமனையாக மாற்றிவிட்டு, பழைய தலைமை செயலகத்திலேயே தொடர்ந்து பணியாற்றினார்.

தேர்தலுக்கு முன்னதாக மீனவ கிராம மக்கள் அனைவரும் தவெக-விற்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், தற்போது பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்ட ஆளும் அரசு முன்வந்திருப்பது மீனவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிருப்தியின் வெளிப்பாடு தான் மீனவ கிராம மக்களின் போராட்டம்.

பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால், இங்கு போராட்டம் நடைபெற்றால் அது மிகப்பெரிய போராட்டமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் தான் இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் மீனவர்கள் போராட்டத்தை தொடங்கலாம் என்பதால், இன்று ஒரு நாள் முழுவதும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனத் தகவல் வெளிய்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் நடந்த போராட்டத்தை முன்னிறுத்தி, மீண்டும் அப்படியான போராட்டத்தை தொடங்க விடக் கூடாது என்பதில் தமிழக காவல் துறை அதிக கவனமுடன் இருக்கிறது