📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 18, 2026 12:02 PM

சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் நேற்று மழை வெளுத்துவாங்கியது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.

வடகிழக்கு பருவமழை

மேகவெடிப்பின் காரணமாக சில பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அதை மேக வெடிப்பினால் ஏற்படும் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும், சென்னைக்கு வரும் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் ஐதரபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.