📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 15, 2026 05:03 AM

Box Office: பத்தா வசூல் இதுவரை எவ்வளவு?.. ஜெயிலர் 2 ஒட்டுமொத்தமா அள்ளிட்டு போயிடுமே!

Box Office: பத்தா வசூல் இதுவரை எவ்வளவு?.. ஜெயிலர் 2 ஒட்டுமொத்தமா அள்ளிட்டு போயிடுமே!

சென்னை: அட்லீ வழங்க ப்ரீய ஆட்லீ தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் நடிப்பில் வெளியான பத்தா திரைப்படம் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தை ஓரங்கட்டிவிட்டு கடந்த 2 வாரங்களாக வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்த சிக்மா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்பவே சுமாராக ஓடி அதிகபட்சம் 8 கோடி வரை வசூல் ஈட்டியது.

இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி வெளியான பத்தா திரைப்படம் 13 நாட்களில் இதுவரை 25.83 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் அறிவித்துள்ளது.

அட்லீக்கு லாபம்: விஜய் சேதுபதியின் சம்பளம் இல்லாமல் பத்தா படத்தின் பட்ஜெட் சுமார் 10 கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பத்தா திரைப்படம் தியேட்டர் வசூலிலேயே சுமார் 26 கோடி வசூல் செய்துள்ள நிலையில், ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்டவை மூலம் அட்லீ மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளார் என்கின்றனர்.

இன்றே கடைசி: நேற்று வரை 1,719 காட்சிகள் ஓடி 13வது நாளிலும் சுமார் 1.22 கோடி வசூலை பத்தா அள்ளி உள்ளது. இன்றைக்கும் ஒரு கோடிக்கு மேல் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பத்தா படத்தின் க்ளோசிங் வசூல் இன்றுடன் முடிந்து விடும் என்றும் கூறுகின்றனர். நாளை அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த வாரம் அக்டோபர் 16ம் தேதி மேலும், ரணபலி, ட்ரோன்ஸ், கலையரசனின் டைட்டானிக் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், பத்தா படம் அதிகபட்சமாக 28 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2விலும் விஜய் சேதுபதி: பத்தா திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் 2விலும் விஜய் சேதுபதி கேமியோ உள்ளது எனக் கூறுகின்றனர். ஜெயிலர் 2வில் நடித்துள்ளதாக விஜய் சேதுபதியே ஓபனாக தெரிவித்து இருந்தார். ஆனால், அவருடைய போர்ஷன் நீக்கப்பட்டு விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. நாளை வெளியாகும் ஜெயிலர் 2விலும் விஜய் சேதுபதி இருந்தால் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான். ட்ரெயின், ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு, பாக்கெட் நாவல், இஞ்சி வெல்லம் என வரிசைக் கட்டி விஜய் சேதுபதி படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இளம் நடிகர்களில் இவர் போல நடிப்பதையே வாழ்க்கையாக கொண்டு வாழும் நடிகர்கள் ரொம்பவே குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.