Bigg Boss Tamil 10 Eviction: முதல் வாரத்தில் மூட்டை முடிச்சியை கட்டப்போறது இவர்தானாம்.. பிக் பாஸ் 10!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு சூடுபிடித்துள்ளது. ஷாதிகா நாமினேட் செய்ததைத் தொடர்ந்து, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சாந்தினி ஆகிய மூவரும் இந்த வாரம் எவிக்ஷன் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.
ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்ச்சியிலேயே ஒவ்வொரு போட்டியாளரும் ஆன் ஸ்டேஜிலெயே எவிக்ட் ஆகி பிக் பாஸ் வீட்டுக்குள் கூட செல்ல முடியாமல் வெளியேறியது நிகழ்ச்சி இந்த முறை நல்ல யுக்திகளுடன் ஆரம்பித்துள்ளது என ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக இட்டிஸ் பிரசாந்த் எவிக்ட் ஆனது சோஷியல் மீடியாவில் மரண ட்ரோல் ஆகி வருகிறது. மேலும், வீட்டுக்குள் சென்ற பிளாக் பாண்டி எல்லாம் என்னத்த கேம் ஆடப் போகிறார் என விமர்சிக்கப்பட்ட நிலையில், ஒரே ஆளாக கிச்சனை பார்த்த அவருக்கு உடல்நிலை சரியில்லை என வந்த வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மூன்று பேர் மேல் கத்தி: பிக் பாஸ் வீட்டில் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என்றால், இந்த வாரம் மூவரும் தங்களது ஆட்டத்தையும் திறமையையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பதற்றமும் எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
நட்பு, தனிப்பட்ட உறவுகள் மற்றும் விளையாட்டு வியூகங்கள் எனப் பல்வேறு காரணிகள் இந்த நாமினேஷனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சாந்தினி ஆகிய மூவரில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு விடை கொடுக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தான் எவிக்ட் ஆகப்போகிறாரா?: முனியம்மாவுக்கு கண்டிப்பாக மக்கள் சப்போர்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் காமன் மேனில் இருந்து வந்த அவர் அவ்வளவு சீக்கிரம் வெளியேறமாட்டார் என்கின்றனர். நடிகை சாந்தினி தமிழரசனுக்கும் ரசிகர்கள் சப்போர்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெசார்ட் நடிகை தன்யா பல்லத் தான் இந்த வாரம் எவிக்ட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியிலும், JioHotstar தளத்திலும் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்து கண்டு மகிழலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் உடனுக்குடனான 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் தடையின்றிப் பார்க்கலாம்.