📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 30, 2026 09:03 AM

``அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்"

``அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்"

``அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

எடப்பாடி பழனிசாமி தவெக மீது வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதவ் அர்ஜுனா பதிலளித்திருக்கிறார்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக, தவெக, அதிமுக என மூன்று கட்சிகளும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கிடையில் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி, தவெக மற்றும் முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``தி.மு.க தேர்தல் வரும்போதெல்லாம் அவதூறுகளையும், குறிப்பாக பெண்களை மையப்படுத்திய தனிப்பட்ட தாக்குதல்களையுமே பிரசாரமாக மாற்றி வருகிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கிய இந்தப் பாணி, ஜெயலலிதா மற்றும் தற்போதைய தவெக தலைவர் விஜய் வரை தொடர்கிறது.

தி.மு.கவின் இந்தத் தனிப்பட்ட விமர்சனப் பாணியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்திருக்கிறார். 2016-ல் 41% வாக்குகளுடன் தனித்து வெற்றி பெற்ற அ.தி.மு.க, இன்று 10% வாக்குகள் மட்டுமே உள்ள கட்சியாக மாறி பலவீனமடைந்துள்ளது.

ஜெயலலிதாவிடம் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்த முன்னாள் முக்கிய நிர்வாகிகளும் இன்று எடப்பாடி பழனிசாமியை விட்டு விலகி இருக்கிறார்கள். இன்று அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் மட்டுமே அதிகாரத்தில் இருக்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் 15 தொகுதிகளில் மட்டுமே வென்றது அதிமுக. குறிப்பாக 7 தொகுதிகளில் பா.ம.க இல்லை என்றால் வெற்றிப்பெற்றிருக்க முடியாது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் அருண்குமார் கடத்தப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 15 அன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட்டார்.

பணபலத்தைப் பயன்படுத்தி வேட்பாளரை விலைக்கு வாங்கி நடத்திய இதுமட்டும் குதிரை பேர அரசியல் இல்லையா?

அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தவில்லை, அவரது மகன் மிதுன்தான் பின்னணியில் இருந்து கட்டுப்படுத்துகிறார். இந்த நிர்வாகச் சீர்கேட்டால் அ.தி.மு.க தென் மாவட்டங்களிலும் டெல்டா பகுதியிலும் முற்றிலும் வலுவிழந்து தோல்வியடைந்துள்ளது.

தற்போது தி.மு.க தலைவராக மு.க. ஸ்டாலினும், அதன் செயல்படாத பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவது போல இரு கட்சிகளும் இணைந்து த.வெ.க-விற்கு எதிராகச் செயல்படுகின்றன.

களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் போன்ற இடங்களில் திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் உதவிக்கொண்டும், ஒருவருக்கொருவர் வாக்கு கேட்டுக் கொண்டும் செயல்படுகின்றன.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கி வைத்த அதிமுக டிரஸ்ட்டில் உள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களையும், வைப்புத் தொகையையும் (FD) கைப்பற்றி, அதைத் தன் மகன் மிதுனிடம் ஒப்படைப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து அ.தி.மு.க-வை அடமானம் வைத்துச் செயல்படுகிறார்.

கட்சியின் நிர்வாகத்திலும், வேட்பாளர்கள் தேர்வு மற்றும் பிரசாரத் திட்டமிடுதலிலும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மட்டுமே முழு ஆதிக்கம் செலுத்துகிறார்.

மறைந்த தலைவர் விஜயகாந்த் தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் எந்தத் திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி தூக்கி எறிந்தாரோ, அதே திமுகவுடன் இன்று தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது.

இந்தச் சுயநல அரசியல் முடிவு மறைந்த விஜயகாந்தின் ஆன்மாவால் கூட மன்னிக்க முடியாத ஒன்றாகும். எனவே, விஜயகாந்த் அன்று திமுகவிற்கு எதிராக முன்வைத்த உண்மையான அரசியல் பாதையையே தவெக மக்களிடம் கொண்டு சேர்க்கும்" என்றார்.