📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 30, 2026 10:00 AM

Yezhu Kadal Yezhu Malai First Review

Yezhu Kadal Yezhu Malai First Review

சென்னை: ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படமானது நாளை வெளியாகவிருக்கிறது. படத்தின் மீது ரசிகர்களுக்கு ஓரளவு ஹைப் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் முதல் விமர்சனம் குறித்து தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராம். அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். கடைசியாக அவர் இயக்கிய பறந்து போ திரைப்படம்கூட இந்தக் கால பெற்றோர் மற்றும் குழந்தைகள், குழந்தை வளர்ப்பு முறையை குறித்து பேசியிருந்தது. அதற்கு ஓரளவு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்போது அவர் ஏழு கடல் ஏழு மலை படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்: படமானது நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில்; சிங்கப்பூரில் அந்தப் படம் NC 16 ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. அதாவது 16 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்கக்கூடாது என்பதுதான் NC 16 ஆகும். இந்நிலையில் படத்தின் முதல் விமர்சனம் குறித்தும் தெரியவந்திருக்கிறது. அதன்படி, ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ரயிலில் பயணம் செய்யும் ஒரு மனிதனை மையமாக கொண்டதாம். அந்தப் பயணத்தில் ஒரு எலியை பாதுகாக்கும் அழிவில்லா மனிதரை அவர் சந்திக்கிறார்.

காதல் கதை: அப்போது அந்தப் பயணியிடம் அழிவில்லாத மனிதர் தனது துயரமான காதல் கதையை விவரிக்கிறார். இதற்கிடையே பயணியும் ஆதரவற்ற சிறுவனும் அந்த அழிவில்லா மனிதருடன் ஏற்படுத்துக்கொள்ளும் தொடர்புகள்; இறுதியில் ஒரு பதற்றமான மோதலுக்கு வழிவகுத்துவிடுமாம். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதையாம்.

சிங்கப்பூரில் சான்றிதழ்: படத்தில் சில கடுமையான மற்றும் கொச்சையான வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதுமாதிரியான வார்த்தைகள் இடம்பெறுவதால்தான் NC 16 சான்றிதழ் படத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. சில இடங்களில் வன்முறை ஓவராகவே காட்டப்பட்டிருக்கின்றன.

அனிமேஷன் காட்சியில்: குறிப்பாக ஒரு அனிமேஷன் காட்சியில் வேட்டைக்காரர் இரண்டு விலங்குகளை ஈட்டியால் குத்தி கொல்வதும், இரத்தம் வெளிப்படுவதும் காட்டப்படுகிறது. மற்றொரு காட்சியில் ஒரு கேரக்டர் சண்டையிட்டு அதீத வயலன்ஸில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் சோஷியல் மீடியாவில் வந்த தகவலின் அடிப்படையில் கூறப்பட்டிருக்கின்றன. படம் வந்த பிறகு வன்முறை காட்சிகள் அதிகமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.