📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 17, 2026 02:33 AM

அன்பில் மகேஷ் இடங்களில் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

அன்பில் மகேஷ் இடங்களில் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

அன்பில் மகேஷ் இடங்களில் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அன்பில் மகேஷ் இடங்களில் நடத்தப்படும் ரெய்டு, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை, என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:

அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடங்களில் ரெய்டு நடத்துவது மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமை செயலகம் முன் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு, ராமநாதபுரம் இரட்டை கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் அடித்து கொலை, அயனாவரத்தில் பெண் காவலரிடம் தவெக நிர்வாகி சீண்டல், என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர்.

இந்த பிரச்னைகளை சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தை திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற தவெக அரசு.

இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தை தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.