Anirudh
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தால் ரஜினிகாந்தும் மு.க.ஸ்டாலினும் உறவினர்கள் ஆக உள்ளனர்.
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சியான சன்குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறனின் ஒரே மகளான காவ்யா மாறனுக்கும், தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கும் திருமணம் நடைபெற உள்ளது.
அனிருத் - காவ்யா மாறன்:
இவர்களின் திருமணம் வெளிநாட்டில் நடைபெற உள்ள நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு வரும் நவம்பர் 21ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. மணமக்கள் இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனிருத் இசையுலகம் மூலம் எந்தளவு பிரபலமோ, காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் உரிமையாளர் என்பதால் அவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆவார்.
மு.க.ஸ்டாலினுக்கு உறவினராகும் ரஜினிகாந்த்:
இந்த திருமணம் மூலமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உறவினர்களாக மாறுகின்றனர். காவ்யா மாறன் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தந்தையான கருணாநிதியின் உடன் பிறந்த சகோதரியின் மகனான முரசொலி மாறனின் பேத்தி ஆவார்.
இசையமைப்பாளர் அனிருத் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் தம்பி ரவிச்சந்திரனின் மகன் ஆவார். ரஜினிகாந்த் அனிருத்திற்கு மாமா முறை ஆவார். ரஜினிகாந்தின் மாப்பிள்ளை தற்போது மு.க.ஸ்டாலின் குடும்பத்தின் மருமகனாக மாற உள்ளார்.
வலுவாகும் ரஜினி - திமுக பந்தம்:
இதுமட்டுமின்றி, கருணாநிதி காலம் முதலே ரஜினிகாந்த் அவர்களின் குடும்பத்தினருக்கு நெருக்கமான நண்பராக உள்ளார். மு.க.ஸ்டாலினுக்கும் அவர் நெருங்கிய நண்பராக திகழ்கிறார். இதன் காரணமாகவே, விஜய் அரசியல் வருகைக்கு பிறகு ரஜினிகாந்த் மறைமுகமாக திமுக-விற்கு ஆதரவு அளித்ததாக தொடர்ந்து தகவல்களும் வெளியாகியது. மேலும், கடந்த திமுக ஆட்சியிலும் மு.க.ஸ்டாலினின் பல்வேறு நிகழ்ச்சியிலும் ரஜினிகாந்த் பங்கேற்றிருந்தார்.
தற்போது ரஜினிகாந்தும் மு.க.ஸ்டாலினும் அதிகாரப்பூர்வமாக உறவினர்களாக மாறப்போவதால் இரு தரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். திருமணத்திற்கும், வரவேற்பிற்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் விஜய் பங்கேற்பு:
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்பட பல மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி விளையாட்டு பிரபலங்களான எம்எஸ் தோனி உள்ளிட்ட பலரும் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியது. சன்ரைசர்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பிரபல தொழிலதிபர்கள் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி