📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Australia Tamil September 14, 2026 09:36 PM

ஆஷஸ் தொடரில் விளையாடுவேனா என தெரியவில்லை.. ஆனால் டி20 தான் என் இலக்கு.. ஸ்மித் கருத்து

ஆஷஸ் தொடரில் விளையாடுவேனா என தெரியவில்லை.. ஆனால் டி20 தான் என் இலக்கு.. ஸ்மித் கருத்து

ஆஷஸ் தொடரில் விளையாடுவேனா என தெரியவில்லை.. ஆனால் டி20 தான் என் இலக்கு.. ஸ்மித் கருத்து

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், 2027 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதற்கு முன்னதாகவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணி கடந்த 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆஷஸ் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.

ஆனால், இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா கடைசியாக 2001 ஆம் ஆண்டு தான் ஆஷஸ் தொடரை வென்றது. இதனால் அங்கு ஒரு வெற்றிகரமான தொடரை வெல்லும் அணியில் இடம்பெறத் தான் விரும்புவதாகவும், ஆனால் அதற்குத் தனது உடற்தகுதி அனுமதிக்க வேண்டும் என்றும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

"நான் அப்போது விளையாடுவேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த சில காலமாகவே ஒவ்வொரு தொடராகத் தான் எனது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வருகிறேன். ஆஷஸ் தொடருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. எனவே, அங்கு போட்டியை வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அது எந்த அளவிற்குச் சாத்தியப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

பொதுவாக ஸ்மித் பெரிய அளவில் காயங்களால் பாதிக்கப்படாதவர் என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அவரது உடற்தகுதி மற்றும் அனிச்சை செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையவுள்ளது.

இதற்கிடையில், சுமார் 128 ஆண்டுகளுக்குப் பிறகு, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்படவுள்ளது. அப்போது ஸ்மித்திற்கு 39 வயதாகும் என்றாலும், ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். "தற்போது எனது முக்கிய இலக்கு ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பகுதியாக இருக்க முயற்சிப்பது தான்" என்று ஸ்மித் கூறியுள்ளார்.

தனது டெஸ்ட் வாழ்க்கையில் 125 போட்டிகளில் விளையாடி 54 சராசரியுடன் 37 சதங்களை விளாசியுள்ள ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

"டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு எனது அடுத்த திட்டம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டில் நான் பல சாதனைகளைப் படைத்துள்ளேன். கடந்த 15 ஆண்டுகள் எனது பயணம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நான் இன்னும் விளையாட்டை ரசித்து விளையாடி வருகிறேன், அதனால் ஓய்வுக்கான தேதியை நான் இன்னும் முடிவு செய்யவில்லை" என்று ஸ்மித் கூறிள்ளார்.