📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 02, 2026 07:00 AM

ஆசிய விளையாட்டு: பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பு

ஆசிய விளையாட்டு: பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பு

45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் வித்யா, விஷால், அபிநயா, பரணிகா மற்றும் கிரிக்கெட் வீராங்கனை கமலினி ஆகிேயார் நேற்றிரவு சென்னை திரும்பினர்.

விமான நிலையத்தில் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் தடகள நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.