📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 16, 2026 01:31 AM

8வது ஊதியக் குழு : சம்பளம்

8வது ஊதியக் குழு : சம்பளம்

மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் வாங்குபவர்கள் என அனைவரும் 8வது ஊதியக் குழுவை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனையொட்டி பல கோரிக்கைகள் ஊழியர்களால் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சம்பளம் உயர்வு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்றது. எனவே அந்த பத்தாண்டு சம்பள மாற்ற சுழற்சிக்கு பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்தால் நன்றாக இருக்கும் என்பது தான் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் வாங்குபவர்களின் கோரிக்கை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மற்றும் ஓய்வூதிய மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கோரிக்கைக்கான காரணம்தற்போதைய நடைமுறைப்படி ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய குழு அமைக்கப்படுகின்றது. ஆனால் இந்த பத்து ஆண்டுகள் பணவீக்கம் அதிகமாக இருப்பதால் பணத்தின் மதிப்பு குறைகின்றது.இந்த 10 ஆண்டுகளில் அனைத்து செலவுகளும் அதிகரித்துவிடுகிறது. என்னதான் அரசு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தினாலும் அது அடிப்படை சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. எனவே இதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லைஇந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்தினால் அடிப்படை சம்பளமும் உயரும். இதனால் பல பலன்கள் உடனடியாக கிடைக்கும்ஓய்வூதியதாரர்களுக்கு என்ன பயன் ?இந்த ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வால் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன் உண்டுஐந்தாண்டிற்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தப்படுவதால் குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் மருத்துவப்படி ஆகியவை காலப்போக்கில் சீரமைக்கப்படும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணவீக்கத்தில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்ஐந்தாண்டிற்கு ஒருமுறை ஊதிய மாற்று சுழற்சி நடந்தால்அடிப்படை சம்பளம் சீரான இடைவெளியில் உயரும்குறிப்பிட்ட கால இடைவெளியில் பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்ஐந்தாண்டிற்கு ஒருமுறை சீராக சம்பளம் உயர்ந்தால் நம் வாழ்க்கைக்கான நிதி திட்டமிடுதல் மேலும் எளிதாகும்எனவே சம்பள உயர்விற்காக பத்து ஆண்டுகள் வரை காத்திருக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் உயர்த்தப்பட்டால் பணவீக்கத்தை சமாளிக்க முடியும். மேலும் நிதி திட்டமிடுதலும் எளிதாகும்.அதற்காக தான் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது