📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 04, 2026 01:03 AM

3வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ்க்கு 352 ரன் இலக்கு

3வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ்க்கு 352 ரன் இலக்கு

நியூ சண்டிகர்: 3-வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி கொண்டது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்றது

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 92 ரன்களும், கில் 1 ரன்னிலும், விராத் கோலி ரன் ஏதும் எடுக்காமலும், ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், நமன் திர் 30 ரன்களும், நிதிஷ்குமார் ரெட்டி 9 ரன்னும், அன்ஷுல் கம்போஜ் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கே.எல்.ராகுல் சதம்:

கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர், 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 129 ரன்களுடனும், பிரார் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன் கள் எடுத்தது.

அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்திய அணி, 352 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வெ ஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், கீமோ பால் 2 விக்கெட்டுகளையும், குடாகேஷ் மோட்டி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 352 ரன் என்ற கடினஇல்க்கை அடைய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோப் அதிரடி சதம் (172 ரன் ) மற்றும் ஜாங்கோ ( 67 ரன்) கீமோ பால் (44 ரன்) ஆகியோரின் திறமையான ஆட்டத்தினால் 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.