29 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
29 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு:
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் பிற பகுதிகள்:
தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.